கணினிகளில் பயன்படுத்தக் கூடிய ஜிமெயில் சேவையில் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் முன் அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட உள்ளது.
ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. புதிய வசதியை கொண்டு ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் முன் பார்க்க முடியும். வீடியோ பயனுள்ளதாக இருப்பின் அதை டவுன்லோடு செய்யலாம்.
புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு டேட்டாவினை சேமிக்க முடியும். முன்னதாக ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்யாமல் பார்க்க முடியாது. புதிய அப்டேட் மூலம் வீடியோக்களை டவுன்லோடு செய்யாமல் வீடியோவின் முண்ணோட்டத்தை பார்க்க முடியும்.
இனி வீடியோ அட்டாச்மெண்ட் மெயிலில் டவுன்லோடு செய்யக் கோரும் பட்டன் அருகில் வீடியோ ஸ்ட்ரீம் செய்யக் கோரும் பட்டன் வழங்கப்படும். கூகுளின் யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் இதர வீடியோ ஸ்டிரீமிங் செயலிகளுக்கு சக்தியூட்டும் உள்கட்டமைப்புகளை பயன்படுத்தி சீரான தரத்தில் வீடியோ வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
புதிய அப்டேட் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக ஜிமெயில் அட்டாச்மென்ட் அளவு 50 எம்பியாக அதிகரிக்கப்பட்டது, இதோடு ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான ஜிமெயில் செயலியில் பணம் அனுப்பும் வசதியை அமெரிக்காவில் மட்டும் கூகுள் வழங்கியது.
Eelamurasu Australia Online News Portal