குமரன்

சைபர் தாக்குதல் அவதானம்!

இணைய உலகில் வாழும் நமக்கு இணையமே எதிர்காலத்தில் பாரிய  தலையிடியாக அமையப்போகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வரும் 50 கோடி பயனாளர்களை கொண்ட ‘டிராப் பாக்ஸ்’ நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென ‘டிராப் பாக்ஸ்’ பயனாளர்களின் ஈ-மெயில் முகவரிகளுடன், பாஸ்வேர்டுகளும் குறிப்பிடப்பட்டு ஒரு பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 6.8 கோடி பயனாளர்களின் கணக்கு விபரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இதை ‘டிராப் பாக்ஸ்’ நிறுவனம் உறுதி செய்துள்ளது. ...

Read More »

எம்.ஜி.ஆர்., பேரன் நடிக்கும் ‛ஓடு குமார் ஓடு

சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. இன்றைய கள்ளக்காதல் கொலைகள் என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம். இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த அன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது ஓடு குமார் ஓடு படம். ஐடி துறையில் ...

Read More »

அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம்

அன்னை தெரசாவுக்கு இன்று(4) வாடிகன் நகரில் நடக்கும் பிரமாண்ட விழாவில் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த இவர், கருணையின் வடிவமாக திகழ்ந்தார். அல்பேனியாவில் 1910, ஆக., 26ம் தேதி பிறந்தார் தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ. இளம் வயதிலேயே சமூக சேவையில் ஆர்வமாக இருந்தார். 18-வது வயதில் ‘சிஸ்டர்ஸ் ஆப் லொரேட்டோ’ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார். 1929ல் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ...

Read More »

இன்று நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு  இன்று செப்டெம்பர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெறுகின்றது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

Read More »

செவ்வாயில் குடியேற ‘நாசா’ பயிற்சி

செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதை சாத்தியமாக்கும் ஆராய்ச்சிக்காக ஹாவாயில் அமைக்கப்பட்ட விண்வெ ளிச் சூழலிலான முகாமில் ஓராண்டு காலத்திற்கு மேலாக தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த 6 விஞ்ஞானிகள் சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தின் புறச்சூழலுக்கு ஏற்ப அந்தக் கிரகத்தில் மனிதன் எப்படி வாழ்வது என்பதை அனுபவ ரீதியிலும் , ஆராய்ச்சி ரீதியிலும் அறிவதற்காக, ஹாவாய் தீவின் மாவ்னா லோ மலைக் குன்றுப் பகுதியில் இந்தத் தனிமை ஆய்வுக்கூடம் அமைக்கப்ப ட்டது. இந்தக் குன்றுப் பகுதியில் காணப்படும் மண் கூட செவ்வாய்க் கிரகத்தை ...

Read More »

ஜேக்கி சானுக்கு ஒஸ்கர் விருது

திரைத்துறையில் இதுவரை ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக, சீனத் திரைப்பட நடிகர் ஜேக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.  ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சானுக்குத் தற்போது 62 வயதாகிறது. சீனத் திரைப்படங்களில்  அசாத்தியமான சண்டை காட்சிகளில் நடித்ததன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.  இதன்மூலம்  ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து “ரஷ் ஹவர்”, “கராத்தே கிட்” போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். இதுவரை 30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கி சான் திரைத்துறையில் அவர் ஆற்றியுள்ள பங்கை கௌரவிக்கும் வகையில் ஒஸ்கர் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. இதன் ...

Read More »

ஈழ புகலிட கோரிக்கையாளர் நாடு கடத்தக்கூடாது-சிட்னியில் ஆர்ப்பாட்டம்

ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து நாடு கடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ்

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் ...

Read More »

அவுஸ்.க்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து மேத்யூஸ் விலகல்

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் ...

Read More »

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்ட வேண்டும் – பான்கிமூன்

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐநா செயலர் பான்கிமூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தினையும், மனித உரிமையின் மதிப்பினை ஏற்படுத்துவதற்கும் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் இது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த ...

Read More »