ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து நாடு கடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal