செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதை சாத்தியமாக்கும் ஆராய்ச்சிக்காக ஹாவாயில் அமைக்கப்பட்ட விண்வெ ளிச் சூழலிலான முகாமில் ஓராண்டு காலத்திற்கு மேலாக தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த 6 விஞ்ஞானிகள் சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
செவ்வாய்க் கிரகத்தின் புறச்சூழலுக்கு ஏற்ப அந்தக் கிரகத்தில் மனிதன் எப்படி வாழ்வது என்பதை அனுபவ ரீதியிலும் , ஆராய்ச்சி ரீதியிலும் அறிவதற்காக, ஹாவாய் தீவின் மாவ்னா லோ மலைக் குன்றுப் பகுதியில் இந்தத் தனிமை ஆய்வுக்கூடம் அமைக்கப்ப ட்டது.
இந்தக் குன்றுப் பகுதியில் காணப்படும் மண் கூட செவ்வாய்க் கிரகத்தை ஒத்ததாக இருந்ததால், அப்பகுதி தேர்ந்தெடுக்க ப்பட்டது. குவிந்த மாடம் போன்று விளங்கும் ஆய்வுக் கூட முகாமிற்குள் அவர்கள் வாழ்ந்தனர். அதை விட்டு வெளியே வரவேண்டு மானால், அவர்கள் விண்வெளிப் பயண ஆடையைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
ஆய்வுக் கூடத்தில் இருக்கும் உணவுக்கு அப்பால் தங்களுக்குரிய உணவை அவர்கள் வெளியில் சுயமாகப் பயிர் செய்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக, செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதற்காக அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்து சிரமங்களையும் அவர்கள் அனுபவ ரீதியில் இங்கே உணர்ந்தனர்.
இந்த விஞ்ஞானிகள் பயிற்சிப் பெற்ற குன்றுப் பகுதபோர் எரிமலையாகும். இது செவ்வாய்க் கிரக மேற்பரப்புக்கு இணையான ஒரு பகுதியாகும். நீண்ட காலம் செவ்வாய்க் கிரகத்தில் வாழப் பழகும் வகையில், தேவையான பயிற்சியைப் பெறும் நோக்கில் அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசா இந்த இடத்தில் முகாமை அமைத்தது.
உளவியல் ரீதியில் விஞ்ஞானிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஆராயப்பட்டது என்கிறது நாசா. இந்த 6 விஞ்ஞானிகளும் இவர்களுக்கு அப்பால் வேறு யாரோடும் தொடர்பின்றி வாழ்ந்தனர். இ-மெயில் தொடர்பு மட்டுமே அனும திக்கப்பட்டது.
எனினும், இ-மெயிலுக்கான பதில் 20 நிமிடங்கள் கழித்தே திரும்பக் கிடைக்கும். இதுதான் செவ்வாயிலிருந்து பூமிக்கு இ-மெயில் வந்து சேருவதற்கான கால இடைவெளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஞ்ஞானிகள் குழுவில் பிரான்சைச் சேர்ந்த விண் உயிரியல் நிபுணர், ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி, மற்றும் விமானி, கட்டடக் கலை நிபுணர், ஊடகவியலாளர், மண்ணியல் ஆய்வாளர் என 4 அமெரிக்கர் நிபுணத்துவத் திறன் பெற்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் நால்வர் பெண்களாவர். ஓராண்டு காலப் பயிற்சியை முடித்துத் திரும்பிய இவர்க ளுக்கு பத்திரிகையாளர்கள் புடை சூழ வரவேற்பு அளிக்கப்பட்டது.