குமரன்

ஃபோல்டபிள் போன் அறிமுகம்!

சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் மடங்கும் தன்மை கொண்ட ஃபோல்டபிள் போன் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது ஃபோல்டபிள் போனுக்கான கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது. கண்ணாடித் திரைக்குப் பதிலாகப் பிரத்யேகமான இன்ஃபினிட்டி பிளக்சி டிஸ்பிளே கொண்டதாக இந்த போன் இருக்கும் என சாம்சங் கூறியது. மடங்கும் நிலையில் ஸ்மார்ட்போனாகவும், பிரித்த நிலையில் டேப்லெட்டாகவும் இருக்கக்கூடிய இந்த போன் பற்றி வேறு அதிக விவரங்கள் வெளியிடப்பவில்லை. ‘காலெக்ஸி எப்’ என அழைக்கப்படக்கூடிய இந்த போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் ...

Read More »

சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு!

அரச கட்டமைப்பின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் கிடைக்கப்பெற்றுவரும் முரண்பாடான தகவல்களுக்கு மத்தியில், குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (சி.ஐ.டி) பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சில்வாவை விலக்குவதற்கும், நீர்கொழும்பு பொலிஸ்  பிரிவில் அவரை இடமாற்றம் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. “அவசியமான சேவைத் தேவைப்பாடுகள்” என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடமிருந்து, நவம்பர் 18, 2018இல் வெளியாகியிருந்தது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவைக் கலந்துரையாடாமல், இடமாற்றத்துக்கான இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்குச் ...

Read More »

மோடியை காமெடி பீஸ் ஆக சித்தரித்த அர்ஜென்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிரதமர் மோடியை அர்ஜென்டினா நாட்டின் பிரபல கார்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்ட ஊடகத்துக்கு கண்டனம் பெருகி வருகிறது. அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான ‘குரோனிக்கா டி.வி.’யில் ஒரு ‘சிம்ப்சன்ஸ்’ என்ற காமெடி கார்டூன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதுபோல் நைய்யாண்டித்தனமான ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. ‘அபு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரத்தை மேற்கத்திய நாடுகளில் வாழும் சில இந்தியர்களுடன் தொடர்புப்படுத்தி இங்குள்ளவர்கள் கிண்டல் ...

Read More »

மூன்று முறை என் பெயரை மாற்றினார்கள்!- இளையராஜா

எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற பராம்பரிய தினம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது இளையராஜாவின் பாடல்கள் பாடியும், ஆடியும் பெண்கள் கலை நிகழ்ச்சிகளை அவர் முன் நடத்தினார்கள்.  அதனைத் தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்தார். மாணவிகள் கேள்விகளுக்கு இளையராஜா அளித்த பதில்களின் தொகுப்பு: சென்னைக்கு நான் வரும் போது கையில் காசு கிடையாது. காசு இல்லாமல் சென்னைக்குப் போய் என்னப்பா பண்ணுவ என்று அம்மா கேட்டார். இல்லம்மா.. ஏதாவது லைட் மியூசிக்கில் வாசித்து சம்பாதிப்பேன் என்றேன். உடனே ...

Read More »

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் காலமானார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94.  முன்னாள் அதிபர் ஜூனியர் புஷ்ஷுன் தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 94வயது வரை உயிரோடு இருந்த முதல் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 41-வது  அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் எச்டபிள்யு. புஷ் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை  அந்த பதவியில் இருந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் காலத்தில் இருமுறை துணை அதிபராகவும் ...

Read More »

தலைகீழ் மாற்றம் – பி.மாணிக்கவாசகம்

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க வல்லது. ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆசியாவில் நீண்டகால ஜனநாயகப் பெருமையுடையதாகக் கருதப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி  நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. எண்ணிக்கையில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் ...

Read More »

பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை!

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். ரிவிரவிற்கு  அவர் இதனை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இரு காவல் துறை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச்செய்துள்ளதுடன்  ...

Read More »

முன்னாள் போராளிகளே சிறிலங்கா காவல் துறையினரை கொலை செய்தனராம்!- -ஐலன்ட்

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளே சிறிலங்கா காவல் துறையினர்  படுகொலை செய்துள்ளனர் என சிரேஸ்ட காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்தார் என ஐலன்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் பலமான கோட்டையாக முன்னர் விளங்கிய வவுணதீவு பகுதியில் இரு காவல் துறையினர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை நேரில் கண்காணிப்பதற்காகாவல் துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றுள்ளார். பூஜித்ஜெயசுந்தரவுடன் சிஐடியின் முக்கிய அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இரு காவல் துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக அப்பகுதியில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பாடசாலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர் மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தினால் உரிய திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என மாணவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என கடந்த திங்கட்கிழமை (26) அவுஸ்திரேலிய பிரதமரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Read More »

அமர்வை புறக்கணித்த அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான ஒழுங்குப் பத்திரங்களை முன்வைத்து, பாட்டலி, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகின்றனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நிதியை ரத்து செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் முன்வைத்தார். ...

Read More »