ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிரதமர் மோடியை அர்ஜென்டினா நாட்டின் பிரபல கார்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்ட ஊடகத்துக்கு கண்டனம் பெருகி வருகிறது.
அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான ‘குரோனிக்கா டி.வி.’யில் ஒரு ‘சிம்ப்சன்ஸ்’ என்ற காமெடி கார்டூன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதுபோல் நைய்யாண்டித்தனமான ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது.
‘அபு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரத்தை மேற்கத்திய நாடுகளில் வாழும் சில இந்தியர்களுடன் தொடர்புப்படுத்தி இங்குள்ளவர்கள் கிண்டல் செய்வதுண்டு.

இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடியின் விமானம் தரையிறங்கியதும் ‘அபு’ வந்து விட்டார் என்ற அடைமொழியுடன் ‘குரோனிக்கா டி.வி.’ பிளாஷ் செய்தி வெளியிட்டது.

இதை கண்ட பல இந்தியர்கள் கொதிப்படைந்தனர். ‘குரோனிக்கா டி.வி.’யின் இந்த ‘குசும்பு’ நிறவெறியின் உச்சகட்டம் என சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal