அமர்வை புறக்கணித்த அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான ஒழுங்குப் பத்திரங்களை முன்வைத்து, பாட்டலி, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகின்றனர்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நிதியை ரத்து செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் முன்வைத்தார்.

அரச நிதியை எக் காரணத்திற்காகவும் முறைகேடாக பயன்படுத்தக்கூடாது என்ற பிரேணையை பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் முன்வைக்க அதை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும் பண்டார வழிமொழிந்தார்.

குறித்த பிரேரணை மீதான விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இன்றும் நாடாளுமன்ற அமர்விற்கு மஹிந்த தரப்பினர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.