விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
ரிவிரவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இரு காவல் துறை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச்செய்துள்ளதுடன் தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது என கருணா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவது ஆச்சரியமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள கருணா விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal