சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் மடங்கும் தன்மை கொண்ட ஃபோல்டபிள் போன் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது ஃபோல்டபிள் போனுக்கான கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது.
கண்ணாடித் திரைக்குப் பதிலாகப் பிரத்யேகமான இன்ஃபினிட்டி பிளக்சி டிஸ்பிளே கொண்டதாக இந்த போன் இருக்கும் என சாம்சங் கூறியது.
மடங்கும் நிலையில் ஸ்மார்ட்போனாகவும், பிரித்த நிலையில் டேப்லெட்டாகவும் இருக்கக்கூடிய இந்த போன் பற்றி வேறு அதிக விவரங்கள் வெளியிடப்பவில்லை. ‘காலெக்ஸி எப்’ என அழைக்கப்படக்கூடிய இந்த போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை 1,770 டாலர் (ரூ. 1.27 லட்சம்) என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.