அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்
மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தினால் உரிய திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என மாணவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என கடந்த திங்கட்கிழமை (26) அவுஸ்திரேலிய பிரதமரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Eelamurasu Australia Online News Portal