முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளே சிறிலங்கா காவல் துறையினர் படுகொலை செய்துள்ளனர் என சிரேஸ்ட காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்தார் என ஐலன்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் பலமான கோட்டையாக முன்னர் விளங்கிய வவுணதீவு பகுதியில் இரு காவல் துறையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை நேரில் கண்காணிப்பதற்காகாவல் துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றுள்ளார்.
பூஜித்ஜெயசுந்தரவுடன் சிஐடியின் முக்கிய அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இரு காவல் துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் இரு காவல் துறையினரது சடலங்கள் மீட்கப்பட்டன அவர்கள் மிக அருகிலிருந்து சுடப்பட்டுள்ளனர் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளே காவல் துறையினரை படுகொலை செய்துள்ளனர் என சிரேஸ்ட காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்தார் என ஐலன்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த முடிவிற்கு பின்னர்காவல் துறை மீது நேரடியாக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் குறித்து ஜனாதிபதி சிறிசேனவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர்.
தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் பொலிஸாரின் கைத்துப்பாக்கிகளை எடுத்துச்சென்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் ஐலன்டிற்கு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், என அதிகாரியொருவர் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள ஐலன்ட் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை எனவும் குறிப்பிட்டார் என தெரிவித்துள்ளது.
கூரான பொருளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அவர்கள் அந்த பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளனர்,விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை காவல் துறையனர் தடுத்ததன் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என அந்த அதிகாரி தெரிவி;த்தார் எனவும் ஐலன்ட் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal