குமரன்

அவுஸ்ரேலியா பல்கலைக் கழகத்தில் மிரட்டல்

ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக் கழகத்தில், வன்முறைச் சம்பவம் பற்றிய மிரட்டல் விடுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக் கழக வளாகத்தின் சில கட்டடங்களில் இருந்து, மாணவர்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். Victoria மாநிலத்தில் உள்ள, அந்தப் பல்கலைக் கழகத்தில் போலீசார் பாதுகாப்புச் சோதனை நடத்தினர். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பல்கலைக் கழகம் கூறியது. சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவிலும், அதன் அண்டை நாடான நியூசிலந்திலும் உள்ள பள்ளிகளுக்கு, வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அண்மை மிரட்டல் விடுக்கப்பட்டது.

Read More »

ராதிகாவை தேர்வு செய்த அவுஸ்ரேலியா!

தென்னிந்திய மக்களிடம் சுற்றுல்லத் துறையை விளம்பரப்படுத்த உள்ள அவுஸ்ரேலியா, அதற்கான விளம்பரப் படங்கள் எடுப்பதற்காக ராதிகாவை தேர்வு செய்துள்ளது. ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் பல்வேறு டிவி சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா, தனது நிறுவனம் மூலம் அவுஸ்ரேலியா சுற்றுல்லாத் துறையுடன் இணைந்து விளம்பரப் படங்கள் எடுக்க இருக்கிறார். இதற்காக அவர் விரைவில், தனது ‘வாணி ராணி’ சீரியல் குழுவினருடன் அவுஸ்ரேலியாசெல்ல இருக்கிறார். அங்கு அந்த சீரியலின் பத்து எப்பிசோட்களை படமாக்குவதுடன், பல்வேறு விளம்பரப் படங்களையும் எடுக்க உள்ளார்.

Read More »

அதிக சதங்கள் நொறுக்கியஅவுஸ்ரேலிய வீரர்

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். *அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு ஆண்டில் ...

Read More »

“மக்களின் பாராட்டு, கொஞ்சம் ‘ஓவர்’தான்!” – ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் இப்போது மிகுந்த உற்சாகமாய் காணப்படுகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தின் அதிரடி வெற்றி அவருக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தனக்காக வடிவமைக்கப்படும் விசேஷ கவுனை அணிந்து அழகு தேவதையாக பொது இடங்களில் வலம் வரும் அவர், பரபரப்பு காட்டாமல் எல்லோருடனும் இயல்பாக பேசுகிறார். எண்ணற்ற செல்பிகளுக்கு ‘போஸ்’ கொடுக்கிறார்! “எப்போதுமே, அவசர அவசரமாக தலையைக் காட்டிவிட்டுப் போவதும், படபடவென்று பேசிவிட்டு கிளம்பிவிடுவதும் எனக்குப் பிடிக்காது. நான் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க ...

Read More »

4000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்

ஜியோனி நிறுவனத்தின் GN5005 எனும் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் இணையத்தளம் வாயிலாக கசிந்திருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்திருக்கிறது. சீனாவின் சான்றளிக்கும் இணையத்தளமான Teanaa ஜியோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. புதிய ஜியோனி GN5005 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் எல்டிஇ வசதி வழங்கப்பட்டுள்ளது. 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட TFT டிஸ்ப்ளே, 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 3 GB ரேம், 16GB இன்டர்னல் மெமரி, மற்றும் மெமரியை கூடுதலாக ...

Read More »

சக வீரரை விமர்சித்த அவுஸ்ரேலிய ஆல்–ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான மேக்ஸ்வெல் சமீபகாலமாக பேட்டிங்கில் ஜொலிக்காததால் அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான அவுஸ்ரேலியா அணிக்கு மேக்ஸ்வெல் அழைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மேக்ஸ்வெல் அளித்த ஒரு பேட்டியில், ‘ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா அணிக்காக விளையாடுகையில் கப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட்டுக்கு பிறகு தான் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக விக்கெட் கீப்பர்கள் பின் வரிசையில் ...

Read More »

ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது- ரிச்சர்டு பீலே

முதலமைச்சரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது. முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், நேற்று மாலை திடீரென முதல்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதன்பின்னர் மீண்டும் தீவிர ...

Read More »

வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் கூட்டமைப்புக்கு அக்கறையில்லை

வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் ஊழியர் தொழிற்சங்கத்தின் 6 ஆவது பேராளர் மாநாட்டு அண்மையில் இடம்பெற்றது. இதில்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவிககையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவி்க்கையில், பலமுறை நான் ஊடகவியாளர்கள் பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பும் போது எம்மை விட்டுப்பிரிந்த ஊடகவியாளர்கள் தொடர்பாக மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். ...

Read More »

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து சிக்கலாக இருப்பதாகவும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதை அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஓர் அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ...

Read More »

சாம்சங் S7 போன்றே காட்சியளிக்கும் கேலக்ஸி A5

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போன் ஆனது பார்க்க கேலக்ஸி S7 போன்றே காட்சியளிக்கும்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. 2017-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் வை-பை சான்றிற்கான சோதனை நடைபெற்றது. இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனாக அறியப்படும் கேலக்ஸி A5 2016 பதிப்பு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனும் ஜனவரி மாதத்திலேயே ...

Read More »