வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் ஊழியர் தொழிற்சங்கத்தின் 6 ஆவது பேராளர் மாநாட்டு அண்மையில் இடம்பெற்றது.
இதில்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவிககையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவி்க்கையில், பலமுறை நான் ஊடகவியாளர்கள் பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பும் போது எம்மை விட்டுப்பிரிந்த ஊடகவியாளர்கள் தொடர்பாக மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். அது எமக்கும் தெரியும்.
ஆனால், வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் நாங்கள் கடந்தகாலங்களில் கொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வீட்டு திட்டங்களை வழங்குவதற்கு முயற்சிசெய்து வருகின்றோம். அந்தவகையில் காலியில் தற்போது வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal