தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து சிக்கலாக இருப்பதாகவும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதை அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஓர் அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal
