அவுஸ்ரேலியாவில் அதிகம் தேடப்பட்டுவந்த பயங்கரவாதியான நீல் பிரகாஷ், துருக்கியில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை தாயகத்திடம் ஒப்படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது. ஐஸிஸ் பயங்கரவாதப் பிரிவுக்கு பிரகாஷ் ஆள் சேர்த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஈராக்கின் மோசுல் நகரில் நடந்த சண்டையில் பிரகாஷ் கொல்லப்பட்டார் என்று கான்பெராவில் அறிவிக்கப்டபட்ட சில மாதங்களில் துருக்கிய அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர். நியூயார்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிரகாஷ் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தது. 23 வயது பிரகாஷ் சில வாரங்களுக்கு ...
Read More »குமரன்
யாழில் திலீபனின் நினைவு தூபியின் முன்பாக மாவீரர் நாள் நிகழ்வு
யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நல்லூருக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். அங்கு உரை நிகழத்திய ரெலோ இயக்கத்தின் தலைவர் சிவாஜிலிங்கம் தமிழீழ தேசிய விடுதலைப் போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் வீர மறவர்களிளிற்கும் ...
Read More »மகரந்த ஒவ்வாமையால் அவுஸ்ரேலியாவில் ஆறாவது நபர் மரணம்
அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) நகரில், மகரந்த ஒவ்வாமையால், ஆஸ்துமா ஏற்பட்டதில், ஆறாவது நபர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியினால் ஏற்பட்ட கன மழையும், கடும் காற்றும் மகரந்த ஒவ்வாமை பரவுவதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கானோர் ஆஸ்துமாவால் அவதியுற்றனர். இன்னும் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சுகாதாரப் பிரிவு பேச்சாளர் தெரிவித்தார். மூவரின் உடல் நிலை மோசமாய் இருப்பதாகவும் கூறப்பட்டது.
Read More »மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!
கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது. மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும். புலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில் இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும். எத்தகைய அடக்குமுறை வந்தபோதும் – மாவீரர் நாளில் ...
Read More »உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்- அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவுக்கு படகில் சட்டத்திற்கு புறம்பாக வந்து உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் என அந்நாட்டு எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தும் ஒப்பந்தம் எந்த வகையிலும் படகு வழியிலான அகதிகள் வரவுக்கு இடமளிக்காது என அவுஸ்ரேலிய அரசு முன்பே எச்சரித்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல் விடுத்துள்ள எச்சரிக்கையில், அகதிகள் மீள் குடியேற்றம் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் ஒப்பந்தம் ஒரு முறை மட்டுமே இடம்பெறும் தீர்வாகும். ...
Read More »கவாஜா சதத்தால் முன்னிலை பெற்றது அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடியெல்டு நகரில் பகல்–இரவு மோதலாக நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்களுடன் திடீரென ‘டிக்ளேர்’ செய்தது. கப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 118 ரன்கள் விளாசினார். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்ரேலியா தொடக்க நாள் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2–வது நாளான நேற்று ...
Read More »காஸ்ட்ரோ தொடர்பாக ட்ரம்ப் மாற்றுக் கருத்து
கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார். காஸ்ட்ரோ பற்றி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி என குறிப்பி்ட்டிருக்கிறார். கியூபா மக்களை அறுபது ஆண்டுகளாக ஒடுக்கி வைத்திருந்தவர் காஸ்ட்ரோ என்றும், தனது தாய் நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமைகளை கூட வழங்க மறுத்தவர் பிடல் என்றும் ட்ரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார். காஸ்ட்ரோ ஏற்படுத்திய சோகம், ...
Read More »இளம் இசையமைப்பாளர் அனிருத்
குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் இளம் இசையமைப்பாளர் அனிருத். அவருக்கென தனி பாணியையே ஆரம்பத்திலிருந்து கடைபிடித்து வருகிறார். தன்னுடைய ஆல்பம்களில் பாடுவதோடு மட்டுமில்லாமல் பல வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கும் அனிருத் தொடர்ந்து பாடி வருகிறார். அதிலும் திரைத்துறையில் பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளர் மற்றவர்களுக்கு பாடி கொடுப்பது என்பது அனிருத்கே உரிய தனி பாணி தான். ரோமியோ ஜூலியட் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் இசையில் டண்டனக்கா பாடலை அனிருத் பாடியிருந்தார். அந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து ...
Read More »மாடல் ஒப்போ A57….!
கமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் ஒப்போ நிறுவனம் தனது அடுத்த மாடலான ஒப்போ A57 -ஐ களமிறக்கியுள்ளது. வரும் டிசம்பர் 12- ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 16,000 இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஒப்போ A57 அம்சங்கள் சில…. * கோல்டன் ரோஸ் மற்றும் கோல்டன் கலரில் இந்த புதிய மாடல் வெளிவரவுள்ளது. * 2900மி.ஆம்பியர் திறனுடைய பேட்டரியில் இயக்கப்படுகிறது. * முன்புற கேமிரா 16-மெகாபிக்சல் திறனுடனும், பின்புற கேமிரா 13-மெகாபிக்சல் திறனுடனும் செயல்படுகிறது. ...
Read More »கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்
கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90. உடல்நலக் குறைவு காரணமாக பிடல் காஸ்ட்ரோ உயிரிழந்ததாக அவரது சகோதரரும், கியூப அதிபருமான ரால் காஸ்ட்ரோ அரசு தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு அறிவித்துள்ளார். ராணுவ ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக புரட்சி செய்து கியூபாவில் கம்யூனிஸ ஆட்சியை மலர செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. இந்த புரட்சியின் போது சேகுவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து செயல்பட்டனர். 1959 முதல் 2008-ம் ஆண்டு வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் கியூபாவை ஆட்சி செய்து ...
Read More »