குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் இளம் இசையமைப்பாளர் அனிருத். அவருக்கென தனி பாணியையே ஆரம்பத்திலிருந்து கடைபிடித்து வருகிறார்.
தன்னுடைய ஆல்பம்களில் பாடுவதோடு மட்டுமில்லாமல் பல வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கும் அனிருத் தொடர்ந்து பாடி வருகிறார். அதிலும் திரைத்துறையில் பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளர் மற்றவர்களுக்கு பாடி கொடுப்பது என்பது அனிருத்கே உரிய தனி பாணி தான்.
ரோமியோ ஜூலியட் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் இசையில் டண்டனக்கா பாடலை அனிருத் பாடியிருந்தார். அந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வரும் போகன் படத்திற்காக இமான் இசையில் ’டமாலு முமீலு’ என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த தகவலை இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சிங்கிள் ட்ராக்கை வரும் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொலைவெறி பாடல் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தப்பின்னும், அலட்டிக்கொள்ளாமல் இசை, நட்பு, எளிமை என ‘இது தான் அனிருத்’ என கூறும் வகையில் தனக்கே தனக்கான ஸ்டைலை தொடர்ந்து வருகிறார்……!
Eelamurasu Australia Online News Portal