குமரன்

‘சிம்லா’ ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுவிக்கப்படுவாரா அபிநந்தன்?

‘சிம்லா’ ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய விமான அபிநந்தன் பாதுகாப்பாக மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்ற கேள்வி தற்போது உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? * சிம்லா ஒப்பந்தமானது வங்காளதேச விடுதலை போரினைத் தொடர்ந்து இந்தியா – பாக்கிஸ்தானிடையே கைச்சாத்திடப்பட்டது. * இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் ஜூல்பிக்கார் அலிபூட்டோவுக்குமிடையே 1972 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி கையெழுத்தானது. *  இதனூடாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த ...

Read More »

மைத்திரி- மஹிந்த- ரணிலுடன் ஜே.வி.பி பேச்சுவார்த்தை !

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்ற முறைமையை உருவாக்கும் 20 ஆம் திருத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் மார்ச் மாதம் முழுவதும் மக்கள் சந்திப்புகள், கூட்டங்கள் நடத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் தீமைகள் குறித்து பேசவுள்ளோம் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Read More »

அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட வாகனங்கள் குறித்து விசாரணை!

சிறிலங்காவின்  பிரபல ரக்பி வீரர் வாசிம்தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என  சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. தாஜூடீன் படுகொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களிற்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டமாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சார்பில் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார் நாரஹன்பிட்டி காவல் துறை  நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித்பெரேரா,முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ...

Read More »

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான அறிவில்லை !

அரசியலமைப்பு பேரவை அரசியல் நோக்கிலே செயற்படுகின்றது. அதன் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான அறிவோ நீதியரசர்கள் தொடர்பான விளக்கமோ இல்லை. அவ்வாறான உறுப்பினர்களைக்கொண்ட பேரவை நீதிபதிகளின் நியமனம் தொடர்பில் எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார். இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More »

யுவன் சங்கர் ராஜா பாராட்டிய பாடல்!

ராம் இயக்கிய ‘பேரன்பு’ படத்தில் ‘செத்துப்போச்சு மனசு’ பாடலின் மூலம் பிரபலமான பாடலாசிரியர் கருணாகரனை அந்த பாடலுக்காக மம்முட்டி, யுவன் சங்கர் ராஜா பாராட்டியிருக்கிறார்கள். ‘பேரன்பு’ படத்தின் ‘செத்துப்போச்சு மனசு’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் வரும் `மரமான செடியைத் தோளில் எப்படிச் சுமப்பது?’ என்ற வரி படத்தின் மொத்த கதையையும் தாங்கியுள்ளது என்று மம்முட்டியும், யுவன் சங்கர் ராஜாவும் பாராட்டினார்கள். இந்த பாடலை எழுதிய கருணாகரன் கூறும்போது, ‘7ஜி ரெயின்போ காலனி’ பாடல்கள் என்னை புரட்டிப்போட்டு பாடலாசிரியர் ஆகும் ஆர்வத்தை ...

Read More »

இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் – இம்ரான்கான்

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக ...

Read More »

வடக்கு ஆளுநரின் வழி, எவ்வழி?

வவுனியா நகரில் எழுந்தருளி, கருணை மழை பொழியும் கந்தசுவாமி கோவிலின் புதிய சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம், அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடை சூழ, அமைதியாக, பக்திமயமாக வெள்ளோட்டம் நடைபெற்றது. “எங்கட நிலமெல்லாம் எங்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன; எங்கட இடமெல்லாம் சிங்கள மயமாகின்றன; சொந்த நாட்டிலேயே பல்லாண்டு காலம், நடைப்பிணங்களாக வாழும் நாதியற்ற எங்களுடன், நாட்டாண்மை காட்டுகின்றார்களே; கந்தனே! இதை யாரிட்ட சொல்லி அழ; தமிழ்க் கடவுளே! கண் திறக்க மாட்டாயா; எம்மைக் காக்க உனையன்றி யாருமில்லை” இந்த வேண்டுதல், இங்கு வந்திருந்த பெரியவர் ஒருவரின் ...

Read More »

பிரிட்டன் பெண்ணுக்கு அவுஸ்ரேலியாவில் காத்திருந்த அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவில் சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரித்தானிய பெண், தன்னுடைய பையில் ஒரு பாம்பு இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோய்ரா பெல்லால் என்கிற ஸ்காட்லாந்து பெண் தன்னுடைய கோடை விடுமுறையை கழிப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தன்னுடைய மருமகனுடைய வீட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவருடைய மருமகன் ஏர்லி மற்றும் அவரது மனைவி சாராவுடன் நாட்களை கழித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த பின்பு பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வைக்கும் வேலையில் அவர் இருந்துள்ளார். அப்போது அவரது ...

Read More »

கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!

17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலுமுள்ள கிராம உத்தியோகத்தர்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனரென, இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது 17 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிரதிகள்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. தங்களின் கோரிக்கைகளுக்கு, பொறுப்புவாய்ந்த தரப்பினரிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால்,  ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட ...

Read More »

மைத்திரிகொலைச் சதி ; விடுதலையானார் இந்தியப் பிரஜை!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையான மெர்சாலின் தோமஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவல் துறை  மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறிலங்கா  ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும்  சதித்தத் திட்டம் தொடர்பாக ...

Read More »