மைத்திரிகொலைச் சதி ; விடுதலையானார் இந்தியப் பிரஜை!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையான மெர்சாலின் தோமஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவல் துறை  மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா  ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும்  சதித்தத் திட்டம் தொடர்பாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.