அவுஸ்திரேலியாவில் சுற்றுலா முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரித்தானிய பெண், தன்னுடைய பையில் ஒரு பாம்பு இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மோய்ரா பெல்லால் என்கிற ஸ்காட்லாந்து பெண் தன்னுடைய கோடை விடுமுறையை கழிப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தன்னுடைய மருமகனுடைய வீட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அவருடைய மருமகன் ஏர்லி மற்றும் அவரது மனைவி சாராவுடன் நாட்களை கழித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று வீடு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த பின்பு பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வைக்கும் வேலையில் அவர் இருந்துள்ளார்.

அப்போது அவரது காலனியில் ஒரு பாம்பு போன்ற உருவத்தினை பார்த்துவிட்டு, பயமுறுத்துவதற்காக ஏர்லி தம்பதியினர் தான் விளையாட்டு பாம்பை வைத்திருக்க வேண்டும் என எண்ணியுள்ளனர்.
அதன் மீது கை வைக்கும் போது அசைவதை பார்த்து அதிர்ச்சியடைந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பாம்பினை பிடித்து கிளாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்காவில் விட்டனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த பாம்பு விஷத்தன்மை இல்லாமல் இருந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal