நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்ற முறைமையை உருவாக்கும் 20 ஆம் திருத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் மார்ச் மாதம் முழுவதும் மக்கள் சந்திப்புகள், கூட்டங்கள் நடத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் தீமைகள் குறித்து பேசவுள்ளோம் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal