17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலுமுள்ள கிராம உத்தியோகத்தர்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனரென, இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது 17 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதன் பிரதிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களின் கோரிக்கைகளுக்கு, பொறுப்புவாய்ந்த தரப்பினரிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட அங்கத்தவர்கள் தீர்மானித்துள்ளனரென, இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.