ராம் இயக்கிய ‘பேரன்பு’ படத்தில் ‘செத்துப்போச்சு மனசு’ பாடலின் மூலம் பிரபலமான பாடலாசிரியர் கருணாகரனை அந்த பாடலுக்காக மம்முட்டி, யுவன் சங்கர் ராஜா பாராட்டியிருக்கிறார்கள்.
‘பேரன்பு’ படத்தின் ‘செத்துப்போச்சு மனசு’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் வரும் `மரமான செடியைத் தோளில் எப்படிச் சுமப்பது?’ என்ற வரி படத்தின் மொத்த கதையையும் தாங்கியுள்ளது என்று மம்முட்டியும், யுவன் சங்கர் ராஜாவும் பாராட்டினார்கள்.
இந்த பாடலை எழுதிய கருணாகரன் கூறும்போது, ‘7ஜி ரெயின்போ காலனி’ பாடல்கள் என்னை புரட்டிப்போட்டு பாடலாசிரியர் ஆகும் ஆர்வத்தை ஏற்படுத்தின. ஆரம்ப காலகட்டத்துலேயே ராம் சாரிடம் பாடல் வாய்ப்பு கேட்டிருக்கேன். `நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வரட்டும் கருணா, பின்னர் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். உடனே, `அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேணாம் சார்’ என்றேன்.
அவ்வப்போது யுவன் சார் ஆபீசில் சந்திப்போம். ஒருநாள் நான் எழுதிய பாடலை அவரிடம் காட்டினேன். `அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். `பேரன்பு’ படத்துக்கு பாட்டு எழுத கூப்பிட்டபோது ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன்’ என்றார்.
Eelamurasu Australia Online News Portal