குமரன்

விரைவில் புலிகேசி 2 ஆம் பாகம் தொடக்கம்!

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பினை இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இப்படம் மிக பெரிய அளவில் வெற்றிபெற்றது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடுங்குவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். புலிகேசி வெளியாகி 11 ஆண்டு ,விரைவில் புலிகேசி 2 விரைவில் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்

Read More »

ஈழத்து நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகம்!

ஈழத்து  நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகம். இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கும் புதிய படம் ஒவியா, இந்த படத்தில் தன்னை முறையாக பராமரிக்காமல் தனது சாவுக்கு காரணமான தனது பெற்றோர்களை பழிவாங்கும் குழந்தையின் வாழ்க்கை படம் தான் ஒவியா, இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின்களாக காண்டீபன், மிதுனா, குழந்தை நட்சத்திரமாக சுவிஷா ஜெயரத்னம் நடிக்கிறார்கள். இது படத்தின் நாயகியாக ஈழத்தைச் சேர்ந்த நடிகை மிதுனா முதன் முறையாக தமிழில் அறிமுகமாகிறார். ஏற்கனவே இலங்கையில் இருந்து நடிகை பூஜா தமிழில் அறிமுகமாகி பாலாவின் நான் கடவுள் ...

Read More »

அவுஸ்ரேலிய யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான அன்சாக் கிளாஸ் பிறிகேற் ரகத்தை சேர்ந்த அருண்ரா (ARUNTA) என்ற யுத்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 118 மீற்றர் நீளத்தையும் 14.8 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த கப்பலில் 24 அதிகாரிகள் உள்ளிட்ட 190 பேர் பணியாற்றுகின்றனர். கடற்படை சம்பிருதாயங்களுக்கமைவாக இந்த கப்பல் வரவேற்கப்பட்ட அதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் 4 நாட்கள் தங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்துள்ள நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்த்தக்கது

Read More »

துன்னாலையில் பதற்றம்! வீதியில் ரயர் கொளுத்தி மக்கள் போராட்டம்!

வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து கரவெட்டி கலிகை சந்தி உள்ளிட்ட பகுதிகளினில் மக்கள் போராட்டங்களினில் குதித்துள்ளனனர்.துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக இரு காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமுள்ளனர். இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் வடமராட்சி கிழக்கு குடத்தனைப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று பிற்பகல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இசசம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்நிலையத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு ஒரு உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப காவல்துறை அதிகாரிகளான உப பரிசோதகர் சஞ்சீவன் மற்றும் முபாறக் ஆகியோர் ...

Read More »

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்!

பிரிஸ்டலில் நேற்று நடந்த அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 8 அணிகள் இடையிலான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்ரேலியா அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்களே எடுக்க ...

Read More »

அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் முதலிடம்!

அவுஸ்ரேலியா பார்முலா1 கார்பந்தயம் போட்டியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 48.523 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9-வது சுற்றான அவுஸ்ரேலியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 306.452 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் ...

Read More »

சூரிய சக்தியால் உப்பு நீரை குடிநீராக்கலாம்!

பல நாடுகளில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, கடல் நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், இத்தொழில்நுட்பத்திற்கு அதிக மின்சாரம் தேவை.அமெரிக்காவிலுள்ள, ரைஸ் பல்கலைக்கழகத்தின் நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவு, ஏற்கனவே பரவலாக உள்ள சவ்வு மூலம் உப்பு நீரை வடிகட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தில், சூரிய ஒளி வெப்பத்தை உறிஞ்சும், நேனோ கரித் துகள்கள் தடவிய சவ்வு ஒன்று உள்ளது.இந்த சவ்வின் மீது சூரிய ஒளி படும்போது, அதன் வெப்பத்தால் நீர் ஆவியாகிறது. நீராவி குளிர்ந்ததும் துாய நீர் ...

Read More »

”தலைவர் பிரபாகரன் உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் என வாழவில்லை! ” நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி விடுதலைப் புலிகள் தொடர்பான தனது நிலைப்பாடுகளை அவ்வப்போது தெரிவித்துவரும் நிலையில், தற்போது, தலைவர் பிரபாகரன் செய்த தியாகத்தை நான் உறிதியாக நம்புகிறேன் என்று தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். குறிப்பிட்ட பேட்டி, தற்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்களினை இங்கே தருகின்றோம், ”நான் முதலும் ஒருமுறை தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பற்றி பெருமையாக பேசியபோது சில நபர்கள் மிகவும் கேவலமான முறையில் என்னைத் திட்டியிருந்தார்கள்.” அவரால் தாம் பாதிக்கப்பட்டதாகவும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களா நீங்கள்?

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்களின் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 53.3 வீதமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பெண்களின் எண்ணிக்கை 46.7 வீதம் எனக் கூறப்படுகிறது. இவர்களில் பதிவுத் திருமணம் செய்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 38,449 என்றும், அதேவேளை திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 18,507 என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி பேசுபவர்களில் 74.8 வீதமானோர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். 9.6 வீதமானவர்கள் கத்தோலிக்க மதத்தையும் 4.2 வீதமானவர்கள் இஸ்லாமையும் பின்பற்றுகின்றனர். மேலும் அவுஸ்ரேலியாவில் வாழும் ...

Read More »

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பாடகாராகிறார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த ஹர்பஜன் சிங் தற்போது மிதூன் இசையில் பாடல் ஒன்று பாட உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். 37 வயதாகும் இவருக்கு தற்போது இந்திய சீனியர் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐ.பி.எல். தொடர், ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது ஹர்பஜன் சிங் பாடகராக அவதாரம் எடுக்க உள்ளார். இந்திய நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்ட உண்மையான ஹீரோக்களை போற்றும் ...

Read More »