நடிகை கஸ்தூரி விடுதலைப் புலிகள் தொடர்பான தனது நிலைப்பாடுகளை அவ்வப்போது தெரிவித்துவரும் நிலையில், தற்போது, தலைவர் பிரபாகரன் செய்த தியாகத்தை நான் உறிதியாக நம்புகிறேன் என்று தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
குறிப்பிட்ட பேட்டி, தற்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்களினை இங்கே தருகின்றோம்,
”நான் முதலும் ஒருமுறை தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பற்றி பெருமையாக பேசியபோது சில நபர்கள் மிகவும் கேவலமான முறையில் என்னைத் திட்டியிருந்தார்கள்.”
அவரால் தாம் பாதிக்கப்பட்டதாகவும் இது தெரியாமல் பேசவேண்டாம் என்றும் மிக அருவருக்கத்தக்க வார்த்தையில் தன்னை ஏசியதாகவும் குறிப்பிட்ட கஸ்தூரி, இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் நாட்டு முஸ்லிம்களைப் போல தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்துவதில்லை என்றும், அவர்கள் எப்பொழுதும் தம்மை வேறொரு இனமாகக் காட்டுவதையே விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தலைவர் பிரபாகரனைப் பற்றியோ அவரது போராட்டம் பற்றியொ யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் தான் அவரது தியாகத்தையும் இலட்சியத்தையும் என்றைக்கும் நம்புவதாகாவும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.
”நீங்கள் பிரபாகரனைப் பற்றி ஆதாரத்தோடு ஒருவார்த்தை தவறாகச் சொன்னாலும் நான் அவர் தொடர்பான எனது நிலைப்பாட்டிலிருந்து ஒரு சிறு துளியேனும் பின்வாங்கப்போவதில்லை. ஏனெனில் அவர் போராளிகளை மட்டும் போர்க்களத்துக்கு அனுப்பவில்லை. தனது பிள்ளைகளையும் அனுப்பி பறிகொடுத்தார். தானும் போர்க்களத்தில் நேரடியாக இறங்கிச் செயற்பட்டார். அவர் ஒருபோதுமே உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் என்று சொன்னதில்லை. அவர் புறமுதுகிட்டு ஓடிப்போய் இன்னொரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வாங்கவுமில்லை.
இதைவிடுத்து என்னைப்பற்றி வசைபாடுபவர்களைப் பற்றி எனக்கு எந்தவித கவலையும் இல்லை, நான் யாருக்காகவும் எனது இந்த நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கப்பொவதில்லை” என்றும் நடிகை கஸ்தூரி மேலும் குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal