ஈழத்து நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகம்!

ஈழத்து  நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகம். இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கும் புதிய படம் ஒவியா, இந்த படத்தில் தன்னை முறையாக பராமரிக்காமல் தனது சாவுக்கு காரணமான தனது பெற்றோர்களை பழிவாங்கும் குழந்தையின் வாழ்க்கை படம் தான் ஒவியா,

இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின்களாக காண்டீபன், மிதுனா, குழந்தை நட்சத்திரமாக சுவிஷா ஜெயரத்னம் நடிக்கிறார்கள். இது படத்தின் நாயகியாக ஈழத்தைச் சேர்ந்த நடிகை மிதுனா முதன் முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

ஏற்கனவே இலங்கையில் இருந்து நடிகை பூஜா தமிழில் அறிமுகமாகி பாலாவின் நான் கடவுள் மூலம் பிரபலமடைந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.