சென்னை, கோயம்பேடு சந்தையில் , பழ வியாபாரிகளுடன் அவுஸ்ரேலிய துணை பிரதமரின் உதவி அமைச்சர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அவுஸ்ரேலிய அப்பிள் வாங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பிள் மற்றும் புளுபெர்ரி பழத்தை இறக்குமதி செய்யுமாறு வியாபாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் 600க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த விலை பழக்கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு வாஷிங்டன், நியூசிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல் மூலம், ஒரு மாதத்திற்கு ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுத்துறை துணை அமைச்சர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்!
அவுஸ்ரேலியாவில் இருந்து வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுத்துறை துணை மந்திரி கெய்த் பிட் தலைமையிலான குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த குழு இன்று இந்திய உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் மற்றும் இந்திய அதிகாரிகள் கொண்ட குழுவினரை சந்தித்தது. இந்தியாவுக்கான அவுஸ்ரேலிய துணை தூதர் கிறிஸ் எல்ஸ்ராப்ட், உருக்குத்துறை செயலாளர் அருணா சர்மா மற்றும் இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின்போது, தேசிய உருக்கு கொள்கை-2017 மற்றும் மோடி தலைமையிலான இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பிற முயற்சிகள் தொடர்பான விவரங்களை பிரேந்தர் ...
Read More »ரூபாவின் அதிரடி! நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு!
சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய டி.ஐ.ஜி. ரூபாவின் அதிரடி, சினிமா படமாகிறது. அதில் ரூபாவாக நடிகை நயன்தாரா, அனுஷ்காவிடம் பேச்சுவாரத்தை நடத்தப்பட இருக்கிறதாம். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் தான் கூறியது உண்மைதான் என்று ...
Read More »சாம்சங் கேலக்ஸி J7 பிளஸ் புகைப்படங்கள்!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சீனாவின் வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்மார்ட்போன் அனைத்து கோணங்களிலும் காட்சியளிக்கிறது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் பிளாக் நிற மாடல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெய்போவில் வெளியாகியுள்ள தகவல்களில் ...
Read More »புகலிடக் கோரிக்கையாளருக்கு அவுஸ்ரேலிய அரசின் அதிரடி அறிவிப்பு
அவுஸ்ரேலியப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலருக்கு கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஸ் மற்றும் நவ்ரு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்பட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு உதவியுடன் அவர்கள் சமூகத்தில் வாழும் நடை முறை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் தயாரிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதேவேளை “final departure Bridging E Visa” என்று அரசு கூறும் விசா வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்று ...
Read More »ஐரோப்பிய தலைவர்களின் சிலைகளின் மீது பெயின்ட்!
சிட்னியிலுள்ள பல ஐரோப்பிய தலைவர்களின் சிலைகளின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் பெயின்ட் தெளித்துச் சென்றுள்ளனர். அவுஸ்திரேலியா எனும் கண்டத்தில் ஐரோப்பியர்கள் குடியேற காலடிபதித்த நாளான ஜனவரி 26 எனும் நாளை அவுஸ்திரேலிய தினமாக கொண்டாடக் கூடாது என்று பல குரல்கள் ஆர்ப்பரித்து வருகின்றன. இதன் பின்னணியில் இந்த சிலைகளின்மீது பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தவர் “discovered” the territory in 1770” என்று ஜேம்ஸ் குக் அவர்களின் சிலையின் மீது எழுதப்பட்டிருக்கும் வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி ...
Read More »அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 வயது சிறுமி உயிரிழப்பு!
சிட்னி Lalor Park பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அனுமதியில்லாமல் துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக, குறித்த சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (27) இரவு அவசர சேவைப்பிரிவினர் சிறுமியின் வீட்டுக்கு அழைக்கப்பட்டபோது, கழுத்தில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்திருந்தார். குறித்த சிறுமி துப்பாக்கியை எடுத்து தன்னைத்தான் சுட்டுக்கொண்டாரா அல்லது தந்தையால் சுடப்பட்டாரா என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் ...
Read More »சீனாவில் உலக ரோபோ கண்காட்சி!
சீனாவின் பீஜிங் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 25-ம் திகதி உலக ரோபோ கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் மனித கற்பனைக்கும் அப்பாற்பட்ட செயல்திறன்களை கொண்ட ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் காட்சிப்படுத்தியிருந்தினர். 150-க்கும் மேற்பட்ட ரோபோ தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றிருந்தன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில உணவகங்கள் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்களை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்ட ...
Read More »மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பினார் ஓவியா!
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா மீண்டும் தனது சமூகவலைத்தளமான ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே, தனது சமூகவலைத்தளத்தில் கூட ட்வீட் எதுவுமே செய்யாமல் ஓய்வில் இருந்தார். கொச்சியிலிருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை மட்டும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்நிலையில் ஓவியா மீண்டும் தனது ட்விட்டர் தளத்திற்கு திரும்பியுள்ளார். சமூகவலைத்தளத்தில் பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். தனது முதல் டுவிட்டாக, ‘உங்கள் ஒவ்வொருவரிடமிருந்து ...
Read More »வாள்வெட்டுகள் குறித்து ஆராய்ந்த இராணுவ அதிகாரிகள்!
யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நேற்று(26) வடமராட்சியில் நடைபெற்றுள்ளது. துன்னாலையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்பட்டதாக என்று கூறப்படுகின்றது.
Read More »
Eelamurasu Australia Online News Portal