புகலிடக் கோரிக்கையாளருக்கு அவுஸ்ரேலிய அரசின் அதிரடி அறிவிப்பு

அவுஸ்ரேலியப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலருக்கு கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனுஸ் மற்றும் நவ்ரு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்பட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் அரசு உதவியுடன் அவர்கள் சமூகத்தில் வாழும் நடை முறை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் தயாரிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை “final departure Bridging E Visa” என்று அரசு கூறும் விசா வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்று சுமார் நூறுபேர் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இனிமேலும் வரி செலுத்துவோர் இவர்களின் செலவுகளை ஏற்க முடியாது என்று Centrelink ஐ நிர்வகிக்கும் Human Services துறையின் அமைச்சர் Alan Tudge கூறினார்.

இதேவேளை அவுஸ்திரேய அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகளும், அகதிகளுக்காக குரல் தரும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அரசின் இந்த அறிவிப்பால் 100 பேரைப் பாதிக்கும் என்றும், மொத்தத்தில் சுமார் 400 பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் The Human Rights Law Centre and Asylum Seeker Resource Centre கூறுகிறது.

மேலும் அவுஸ்ரேலியாவுக்குள் அழைத்துவரப்பட்டவர்களில் பலர் வேலை செய்து பாதுகாப்பாக வாழும் நிலையில் உள்ளனர்.

இவர்களை அரசு திருப்பி அனுப்புவது கண்டிக்கத்தக்க செயல் என்றும் Asylum Seeker Resource Centre இன் Natasha Blucher தெரிவித்துள்ளார்.