சிட்னியிலுள்ள பல ஐரோப்பிய தலைவர்களின் சிலைகளின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் பெயின்ட் தெளித்துச் சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலியா எனும் கண்டத்தில் ஐரோப்பியர்கள் குடியேற காலடிபதித்த நாளான ஜனவரி 26 எனும் நாளை அவுஸ்திரேலிய தினமாக கொண்டாடக் கூடாது என்று பல குரல்கள் ஆர்ப்பரித்து வருகின்றன.
இதன் பின்னணியில் இந்த சிலைகளின்மீது பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தவர் “discovered” the territory in 1770” என்று ஜேம்ஸ் குக் அவர்களின் சிலையின் மீது எழுதப்பட்டிருக்கும் வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குக் மேலாக அவுஸ்திரேலியாவில் பூர்வீக குடிமக்கள் வாழ்ந்துவரும் நிலையில் சுமார் 247 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த ஜேம்ஸ் குக் இந்த கண்டத்தை கண்டுபிடித்தார் என்று எழுதியிருப்பது எப்படி சரியான வரலாறு ஆகுமென கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதேவேளை வரலாற்றை நாம் விவாதிக்கலாமே தவிர அதனை அழிப்பதற்கு முற்படக்கூடாது என அவுஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.