சிட்னி Lalor Park பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
அனுமதியில்லாமல் துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக, குறித்த சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (27) இரவு அவசர சேவைப்பிரிவினர் சிறுமியின் வீட்டுக்கு அழைக்கப்பட்டபோது, கழுத்தில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்திருந்தார்.
குறித்த சிறுமி துப்பாக்கியை எடுத்து தன்னைத்தான் சுட்டுக்கொண்டாரா அல்லது தந்தையால் சுடப்பட்டாரா என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் தாயும் இன்னும் 3 பிள்ளைகளும் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal






