சீனாவில் உலக ரோபோ கண்காட்சி!

சீனாவின் பீஜிங் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 25-ம் திகதி உலக ரோபோ கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் மனித கற்பனைக்கும் அப்பாற்பட்ட செயல்திறன்களை கொண்ட ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் காட்சிப்படுத்தியிருந்தினர். 150-க்கும் மேற்பட்ட ரோபோ தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றிருந்தன.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில உணவகங்கள் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்களை பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்ட சூழ்நிலையில், இன்னும் எந்தெந்த வேலையெல்லாம் ரோபோக்களிடம் ஒப்படைக்கலாம் என பல நிறுவனங்கள் மில்லியன் டாலர்களை செலவளித்து  மூளையை கசக்கி யோசித்து வருகின்றன.

இந்நிலையில், பீஜிங் ரோபோ கண்காட்சியில் செய்திகளை சேகரிக்கும் நிருபர் ரோபோ, டேபிள் டென்னிஸ் விளையாடும் ரோபோ, வெல்டிங் செய்யும்

ரோபோ, மணல் சிற்பம் வரையும் ரோபோ, ப்ரேக் டான்ஸ் ஆடும் ரோபோ என வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ரோபோக்களின் திறனை கண்டு

பார்வையாளர்கள் வாய்பிளந்து நின்றனர். இன்றுடன் நிறைவடையும் இந்த கண்காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளதாக நிகழ்ச்சி

ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் வேலைகளை மிச்சப்படுத்துவதில் ரோபோக்களின் பங்கு அதிகரித்துவிட்டதால், எதிர்காலத்தில் ரோபோக்களால் பலர் வேலையிழப்புகளை சந்திக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஏன்? மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே போர் நடைபெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.