அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. தென்சீன கடல் விவகாரம், வர்த்தகம் தொடங்கி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் நகரில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், அதை உடனடியாக மூடவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் ...
Read More »குமரன்
20 வது திருத்தம் – நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன?
20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்படவுள்ள குழுவினர் நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் விரிவாக அவதானம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தயோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் நீதிமன்றத் தினதும் சட்டத்துறையினதும் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவுசெய்வதற்கான எதிர்வரும் தேர்த லில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் 20 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத் ...
Read More »மாவீரன் திலீபனின் நினைவு தினத்தை கடைப்பிடிக்க எமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது!
எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்துடன் இணைந்தால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எம் மீது ஒரு இனப்படுகொலையை புரிந்து விட்டு இப்போது இங்கு வந்து நாட்டை கட்டியெழுப்பவது பற்றி கதைத்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அபிவிருத்தி எனும் பெயரில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் மறுதலிக்கபடுகின்றன. மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி எனும் பெயரில் அப்பகுதியை சார்ந்த மீனவர்களுக்கான ...
Read More »இனவாதமின்றி இனி அணுவும் அசையாது
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் தன் இனத்தின், மொழியின் தொன்மை தொடர்பில் நிகழ்த்திய உரைகள் தென்னிலங்கையில் ”ஒரு தமிழன் இலங்கைக்கு உரிமை கோரி விட்டான்” என்ற இனவாதத் தொனியில் ஆளும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களினால் உருமாற்றப்பட்டு சிங்களமக்கள் உருவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாக விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசுமாறும் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இனவாதக்கோஷங்கள் வெளிக்கிளம்பி உள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் ...
Read More »பரந்தனில் தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடியின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வராது!
குறைந்தபட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ...
Read More »19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக அம்சங்களை நீக்க அரசாங்கம் முயற்சி
19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுவதாகதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இதேசமயம் தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்குவதற்கான முயற்சியாக 20 ஆவது திருத்தத்தை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும் என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்,நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வௌியேயும் எதிர்ப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை ...
Read More »ரவிராஜ் படுகொலை தொடர்பில் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்தது என்ன?
முன்னாள் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களும் போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்தனர் என ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அரச அதிகாரிகள் அரசியல்பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிஐடியை சேர்ந்த சிரேஸ் அதிகாரி அமரவன்ச என்பவர் ரவிராஜ் படுகொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியாக தன்னை ஆஜராகுமாறு அழுத்தம் கொடுத்தார் என ...
Read More »2 கோடி ரூபாய் கொடுத்து தத்தெடுத்த பிரபாஸ்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து பல ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வனப்பகுதியை தத்தெடுத்து இருக்கிறார். ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் ...
Read More »கொரோனாவை எதிர்கொள்ள அவுஸ்திரேலியா கையாளும் அணுகுமுறை வெற்றிபெறுமா?
அவுஸ்திரேலியாவைக் கொரோனாத் தொற்று களைப்படையச் செய்கின்றது. இயல்புநிலை விரைவில் திரும்பிவிடுமென சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது தொற்று எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்திருந்தது. அதனால் நம்பிக்கைகள் வலுப்பெற்றன. அத்தகைய சூழ்நிலையிலேயே, ஆனி மாதமளவில் மீண்டும் தொற்று ஏற்பட்டது. அதனால் தொற்றுத் தடுப்பு ஏற்பாடுகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டன. மாநில எல்லைகள் மூடப்பட்டன. உள்நாட்டுப் போக்குவரத்து முடங்கியது. தற்போது மூடப்பட்ட எல்லைகளே சவாலாகின்றன. எல்லைப் பிரதேசங்களில் வசிப்பவர்களின் நிலை திரிசங்கு சொர்க்கமாகியது. அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதே சவாலாகியது. விக்டோரியாவையும் நியூசவுத்வேல்சையும் பிரிக்கும் மறே நதிக்கரையின் இருபுறமும் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal