20 வது திருத்தம் – நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன?

20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்படவுள்ள குழுவினர் நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் விரிவாக அவதானம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்தயோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் நீதிமன்றத் தினதும் சட்டத்துறையினதும் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவுசெய்வதற்கான எதிர்வரும் தேர்த லில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் 20 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத் தரணி காலிங்க இந்த திஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.