முன்னாள் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களும் போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்தனர் என ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அரச அதிகாரிகள் அரசியல்பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிஐடியை சேர்ந்த சிரேஸ் அதிகாரி அமரவன்ச என்பவர் ரவிராஜ் படுகொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியாக தன்னை ஆஜராகுமாறு அழுத்தம் கொடுத்தார் என முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரவிராஜை கொலைசெய்வதற்கான உத்தரவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும்,கடற்படை தளபதி வசந்தகரனாகொடவும் வழங்கினார்கள் என தெரிவிக்குமாறு சிஐடி அதிகாரி கேட்டுக்கொண்டார் என முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் விக்கிரமசிங்க அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக தனக்கு தொலைபேசி அழைப்பு வருவதாக சிஐடியை சேர்ந்த சிரேஸ் அதிகாரி அமரவன்ச தெரிவித்தார் என முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர் இதன் காரணமாக விசாரணையை துரிதப்படுத்தவேண்டும் என சிஐடி அதிகாரி கேட்டுக்கொண்டார் என முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக என்னை அரசதரப்பு சாட்சியாக ஆஜரகுமாறு அவர் கேட்டுக்கொண்டார் என முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
போலிவாக்குமூலங்களை கொடுக்க மறுத்தமைக்காக என்னை பின்னர் கைதுசெய்து 22 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர் இதில் 11 நாட்கள் நான் பாதாளஉலக குற்றவாளிகளுடனும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடனும் தடுத்து வைக்கப்பட்டேன் நான் ஒரு புலனாய்வு பிரிவு அதிகாரி என பாராமல் இதனை செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.