எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்துடன் இணைந்தால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எம் மீது ஒரு இனப்படுகொலையை புரிந்து விட்டு இப்போது இங்கு வந்து நாட்டை கட்டியெழுப்பவது பற்றி கதைத்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அபிவிருத்தி எனும் பெயரில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் மறுதலிக்கபடுகின்றன. மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி எனும் பெயரில் அப்பகுதியை சார்ந்த மீனவர்களுக்கான வாய்ப்புகளை தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மையின சிங்களவர்கள் அபகரிக்கின்றனர்.
எங்களுக்காக உண்ணாநோன்பிருந்து தன் உயிரை தியாகம் செய்த மாவீரன் திலீபனின் நினைவு தினத்தை கடைப்பிடிக்க எமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்காக உயிர்நீத்த அந்த உத்தமனை நினைவுகூர எமக்கு அனைத்து உரிமையும் உண்டு. அதை நீங்கள் தடை செய்ய முடியாது எனவும்செல்வராஜா கஜேந்திரன்மேலும் தெரிவித்துள்ளார் .