19 ஆவது திருத்தத்தில் உள்ள ஜனநாயக அம்சங்கள் பலவற்றை இல்லாமலாக்குவதற்கான முயற்சி இடம்பெறுவதாகதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இதேசமயம் தனிப்பட்ட நபரை நாட்டின் சர்வாதிகாரியாக்குவதற்கான முயற்சியாக 20 ஆவது திருத்தத்தை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கும் என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன்,நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வௌியேயும் எதிர்ப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal