குமரன்

கடவுள் இருக்கிற இடத்துல இருக்கார்!- ந.முத்துசாமி

ந.முத்துசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நீர்மை’ நூலே தமிழ்ச் சிறுகதைத் துறையின் சாதனைகளில் ஒன்றுதான். பேச்சுக்கும் பேசாமல் இருப்பதற்கும் இடையில் இருக்கும் மன மூட்டத்தை, தத்தளிப்பை, உளவியல் அவசங்களை நனவு நிலை ஓட்டத்தை வெற்றிகரமாகத் தன் கதைகளில் கைப்பற்றியவர். ‘தமிழின் பாரம்பரிய தியேட்டர்’ என்று தெருக்கூத்து வடிவத்தைச் சொன்னவர். சிறுகதை எழுதுவதை விட்டுவிட்டு, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நாடகத்துக்காகவும் கூத்து தொடர்பான ஆய்வுகளுக்காகவும் அர்ப்பணித்தார். தெருக்கூத்தை செவ்வியல் நிகழ்த்துக்கலையாக உலக அளவில் நிலைநிறுத்தியவர். ‘கூத்துப்பட்டறை’ அமைப்பின் நிறுவனர். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ ...

Read More »

வீடியோ கேம்ஸ் விளையாடுவதை தடுத்த தாய்! தாக்கிய மகன்!

அவுஸ்திரேலியாவில் 14 வயது சிறுவன், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தலையில் பலமாக தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமுள்ள நிலையில் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான். கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது தாய் பொலிசாரை அழைத்ததையடுத்து, ...

Read More »

சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் அறிமுகமானது!

சியோமி நிறுவனத்தின் Mi வயர்லெஸ் சார்ஜர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi வயர்லெஸ் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய சாதனம் அதிகபட்சம் 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சாதனங்களில் பொதுவான Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி Mi வயர்லெஸ் சார்ஜரில் டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஈழ அகதி விபத்தில் பலி!

சிட்னியில் உள்ள Pendle Hill பகுதியில் உள்ள Gilba Road இல் புதன்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த “ட்ரக்” மோதியதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மன்னார் பேசாலையை சேர்ந்த 25 வயதுடைய மேர்வின் பெர்ணான்டோ என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டவருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை!

அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாப்தீனுக்கு நீதி கோரியே கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் change.org இணையத்தளத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த முகாந்திரமும் இல்லாமல் குறித்த இலங்கையர் கைது செய்தது மட்டுமல்லாமல், உரிய சட்ட வசதிகளை மறுத்தும், அவர் குறித்த செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு வருகின்ற அரச ...

Read More »

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து!

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார். முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார். முதலாவது, ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது; இரண்டாவது, கட்சியொன்றுடன் ...

Read More »

மஹிந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!

கொழும்பு – கடவத்தை பகுதியில் மஹிந்த அணியின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் குறித்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டடுகின்றது. கொழும்பில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக கொடி கட்டிய பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read More »

பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்! – புலனாய்வு தகவல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணியில் 75000 பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக் காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக் காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் காவல் துறையினர்  சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை ...

Read More »

140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்!

உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் ...

Read More »

ஷாரூக்கான் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் இளைய மகள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தியில் வெளியான தடக் படத்தில் அறிமுகமானார். இஷான் கத்தாருக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்தபடியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூரும், பாலிவுட் பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் நாயகனாக அறிமுகமாகப்போகிறாராம். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில், தற்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார் கரண் ஜோஹர்.

Read More »