அவுஸ்திரேலியாவில் 14 வயது சிறுவன், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தலையில் பலமாக தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமுள்ள நிலையில் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான்.
கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது தாய் பொலிசாரை அழைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறை அவரை காப்பாற்றினர்.
இது குறித்து பேசிய லோகனின் தாய் வீடியோ கேம்ஸை வாங்கிக் கொடுக்கும் வரை வெளியில் சென்று விளையாடிக்கொண்டிருந்த லோகன், அதன் பிறகு முழுவதுமாக மாறிவிட்டான்.
உணவு உட்கொள்ளவும், கழிவறைக்கு செல்லும் நேரத்தைத் தவிர முழுக்க முழுக்க வீடியோ கேமில் மூழ்கியிருந்தான் என்று தெரிவித்தார். லோகன் தாக்கியதில், அவரது தாய்க்கு தலையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது.