மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தியில் வெளியான தடக் படத்தில் அறிமுகமானார். இஷான் கத்தாருக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அடுத்தபடியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூரும், பாலிவுட் பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் நாயகனாக அறிமுகமாகப்போகிறாராம்.
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில், தற்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார் கரண் ஜோஹர்.