சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் அறிமுகமானது!

சியோமி நிறுவனத்தின் Mi வயர்லெஸ் சார்ஜர் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi வயர்லெஸ் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய சாதனம் அதிகபட்சம் 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சாதனங்களில் பொதுவான Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி Mi வயர்லெஸ் சார்ஜரில் டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன் மற்றும் ஓவர்-வோல்டேஜ் ப்ரோடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் சியோமி Mi மிக்ஸ் 2எஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் 7.5 வாட்ஸ் அவுட்புட் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 9 மற்றும் இதர மாடல்களுக்கு அதிகபட்சம் 10 வாட் வரையிலான அவுட்புட் வழங்குகிறது.
சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் சிறப்பம்சங்கள்:
அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வயர்லெஸ் சார்ஜரின் மேல்பக்கம் சிலிகான் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்துவித சாதனங்களுக்கும் பொருந்திக் கொள்ளும் வகையில், Qi தரத்திற்கான சப்போர்ட் கொண்டுள்ள Mi வயர்லெஸ் சார்ஜரில் உள்ள எல்.இ.டி. இன்டிகேட்டரை பார்த்தே பயனர்கள் தங்களது சாதனத்தின் சார்ஜிங் விவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் இதன் வயர்லெஸ் சார்ஜிங் தூரம் 4எம்.எம். வரை இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் கேசில் இருந்து எடுத்தாலும் சார்ஜ் ஆகும்ம். இத்துடன் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று பயனர்களின் சாதனங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய Mi வயர்லெஸ் சார்ஜரில் க்விக் சார்ஜ் 2.0 அல்லது க்விக் சார்ஜ் 3.0 அடாப்டர் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 7.5 வாட் அல்லது 10 வாட் திறன் வழங்குகிறது. இந்த சார்ஜரை வழக்கமான 5V/ 2A அல்லது 5V/ 2.4A உடன் இணைக்கும் போது 5வாட் திறன் வழங்கும்.
சியோமி Mi வயர்லெஸ் சார்ஜரில் யு.எஸ்.பி. டைப்-சி இன்டர்ஃபேஸ் மற்றும் அதிகபட்சம் 40 டிகிரி வரையிலான வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது. புதிய சார்ஜருடன் யு.எஸ்.பி. டைப்-சி – யு.எஸ்.பி. கேபிள் வழங்கப்படுகிறது.
சீனாவில் புதிய சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் விலை CNY 69 அதாவது இந்திய மதிப்பில் ரூ.721 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே விற்பனை துவங்கியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.