’தேசியகீதம்’ படத்துக்கும் நிறைய எதிர்ப்புகள் வந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படத்தில் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்துவது போன்ற காட்சிகளுக்குத் தான் அதிமுக கட்சியின் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்கிவிட்டனர். தற்போது அக்காட்சிகள் இல்லாமல் ‘சர்கார்’ திரையிடப்பட்டு வருகிறது. ’சர்கார்’ படக்குழுவினருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்தது தொடர்பாக, திரையுலகினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்கள். ...
Read More »குமரன்
`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்?’ – ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்
ஆஸ்திரேலியா மக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் நேற்று(12) ஆஜர்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குயின்ஸ்லாந்துப் பகுதியில், ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் சுமார் 100 பேர் தாங்கள் வாங்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களிலும் ஊசி இருந்ததாகப் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியதால், ஸ்ட்ராபெர்ரி விற்பனையும் தடைபட்டது. இந்த ...
Read More »பூடான் தாயின் கதை இது!
தொடக்கத்தில், டாக்டர் க்ராமேரிக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அறுவை சிகிச்சைக்காக ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குப் போடப்படும் மயக்க மருந்து, இருவரின் உடலிலும் சரியாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதே அது. பூம்சு சங்மோ (Bhumchu Zangmo) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் இரண்டு குழந்தைகள் பிறக்கக்கூடும் எனக் கணித்திருந்தனர். ஆனால், அந்த இரட்டையர்கள் ஒட்டிப் பிறப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் குழந்தைகளைப் பார்த்து பூடான் மருத்துவர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், பூடான் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் முதல் ஒட்டிப் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் அவர்கள்தாம்! கடந்த வருடம் ...
Read More »ஆஸ்திரேலிய மக்கள் மௌன அஞ்சலி!
முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான நேற்று(11) உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். முதல் உலகப் போர் என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெரும்போரினில் உலகம் தழுவிய அளவில் பல நாடுகள் பங்கேற்ற போதிலும், பெரும்பாலும் இந்தப் போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ...
Read More »நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள்!- விசாரணைக்கு 3 நீதிபதிகள்!
சிறிலங்கா ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களை விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டடுள்ளனர். அதன்படி பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார். இந்நிலையிலேயே ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்படமையானது ...
Read More »தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத்தாக்கல்!
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படமையானது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு எனவும், அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு எனவும் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உட்பட்டோர் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ…
நமக்குள் நிரம்பிக்கிடக்கும் உணர்வுகளின் எல்லைகளைக் கடக்கவோ, அதில் திளைக்கவோ பல நேரத்தில் கைகொடுப்பது இசையும் கவிதைகளுமே! அனுதினமும் நம்முடனே பயணிக்கும் சக பயணிபோலாகிவிட்ட திரையிசைப் பாடல்கள்தான் நம்மில் பலருக்கும் மீட்பன். மனதின் சுவர்களை முள்ளாகத் தைத்துக்கிடக்கும் ரணங்களைக் கடப்பதாகட்டும், தரையில் கால் படாமல் துள்ளிக் குதிக்கும் மகிழ்ச்சி ஆகட்டும் பாடல்களின் கரம் பிடித்தே நாம் கடந்து செல்கிறோம். நம் துயரை, நம் காதலை, நம் இழப்பை, நமக்கான ஒளியை எங்கோ ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார் என்ற நிம்மதி, நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தலை கவிழ்ந்து நாம் ...
Read More »ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்!
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாத காலமாக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக, ஸ்ட்ராபெர்ரி பற்றிய அச்சம் பொதுமக்களிடம் அதிகமாகிக்கொண்டே சென்றது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆஸிதிரேலிய அரசும் திணறியது. பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்ட காரணம், அந்தப் பழங்களில் காணப்பட்ட ஊசி தான். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்நாட்டில் விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டு பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது கடந்த செப்டம்பர் ...
Read More »நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும்!
மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’ அவர்களை விமர்சித்தார். வண்ணாத்திப் பூச்சிகள் என்பது தன்னினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும். அதற்கு மங்கள சமரவீர தான் மைத்திரியைப் போல ‘ஒர் அட்டையல்ல’ என்று கூறியுள்ளார். பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்; சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி சுமார் இருபத்தையாயிரம் பேர் கூடியிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்தே மைத்திரி ரணிலை மேற்கண்டவாறு விமர்சித்தார்.அக்கூட்டத்துக்கு அவர்கள் வைத்த ...
Read More »ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிக்கை!-தமிழக அரசு சிபாரிசை மத்திய அரசு நிராகரித்தது!
ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்ட தமிழக அரசின் சிபாரிசை மத்திய உள்துறை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்ப மறுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறார்கள். நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசும் அவர்களை விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்து மத்திய அரசிடம் இது சம்பந்தமாக சிபாரிசு செய்தது. ...
Read More »
Eelamurasu Australia Online News Portal