ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படமையானது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு எனவும், அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு எனவும் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உட்பட்டோர் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal