‘ஞான வேள்வி’ யூலை -10 செவ்வாய் – “விருந்தோம்பல் எனும் வேள்வி” யூலை- 11 புதன் – “சாதனை செய்க பராசக்தி” யூலை- 12 வியாழன் – “கேள்விகளால் ஒரு வேள்வி” என்ற தலைப்பில், உங்களுடைய தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகள்-சந்தேகங்களை தெளிவுறுத்தும் வகையில் அமையவுள்ளது. தங்களுடைய கேள்விகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜுலை 8ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். kambanaustralia@kambankazhagam.org அனைவரும் ‘ஞான வேள்விப்’ பேருரைகளுக்கு வருகைதந்து, எம் தமிழ்ப் பணிகளுக்கான ஆதரவைத் தந்தும், பயன் பெற்றும், ...
Read More »குமரன்
தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்!
தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணி……இதுவரை 6 பேரை மீட்டுள்ளனர். அந்த குகை மற்றும் அந்த சிறுவர்கள் குறித்த தகவல்களை 5 கேள்வி, பதில்கள் வடிவில் வழங்குகிறோம். ஏன் அந்த பதினொரு சிறுவர்கள் குகைக்குள் சென்றார்கள்? இந்த தருணம் வரை சரியான பதில் தெரியாத கேள்வி இது. ஏன் அவர்கள் ஜூன் 23, சனிக்கிழமை அந்த குகைக்குள் சென்றார்கள் என்பதை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை. பிபிசி தாய்லாந்து செய்தியாளர்கள் தரும் ...
Read More »நவுறு தடுப்பு முகாமிலிருந்து தமிழ்க் குடும்பம் உட்பட சில அகதிகள் அமெரிக்கா சென்றனர்!
அவுஸ்திரேலியாவின் நவுறு தடுப்பு முகாமிலுள்ள மேலும் சில அகதிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். ஒரு தமிழ் குடும்பம் உட்பட ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் ரொஹின்யா பின்னணி கொண்ட சுமார் 22 பேருகு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றதாக Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் Ian Rintoul கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள். அங்கு செல்லும் அகதிகளுக்கு முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும். மேலும் ஒரு ...
Read More »கூகுளில் ரூ.1.2 கோடிக்கு வேலை.. மும்பை இளைஞரை தூக்கிச் சென்ற சுந்தர் பிச்சை !
கூகுள் நிறுவனத்தின், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மும்பையை சேர்ந்த ஆதித்யா பல்லிவால் என்ற 22 வயது இளைஞர் தேர்வாகி உள்ளார். இவருக்கு வருடத்திற்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். உலகில் மிகவும் சக்தி வாய்ந்து தலைமை செயலதிகாரிகளில் இவரும் ஒருவர். அதேபோல் விண்டோஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக சத்யா நாதெல்லா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற, இந்தியாவை சேர்ந்த இன்னொரு இளைஞரும் ...
Read More »நாடாளுமன்றத்தைக் குலுக்கிய அந்த நான்கு வார்த்தைகள்!
யாழ்ப்பாணம்–வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரசதலைவர் மக்கள் சேவை நிகழ்வின்போது இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையில் வெளியிடப்பட்ட நான்கு வார்த்தைகள் பெரும் பூகம்பமாக மாறி, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வானேறி, நாடு முழுவதும் இரவோடிரவாகப் பரந்து அடுத்த நாளில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வையே அதிர்ந்து குலுங்க வைத்துவிட்டன. அந்த வார்த்தைகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியினர், பதினான்கு பேர்கள் கொண்ட அணி, அரச தரப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர் என எவரையும் விட்டுவைக்காமல் கொதித்தெழ வைத்துவிட்டன. பாதுகாப்புப் பிரதியமைச்சர் ருவான் விஜயவர்த்தனா அவை உண்மைக்குப் ...
Read More »ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான்!
பகர் சமான், சோயிப் மாலிக்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆர்கி ஷார்ட் (76), ஆரோன் பிஞ்ச் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ...
Read More »தாய்லாந்து குகைக்குள் இருந்து 6 மாணவர்கள் மீட்பு!
தாய்லாந்து நாட்டில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. திடீரென பெய்த ...
Read More »வான் பயணங்களுக்கு -22 லட்சம் ரூபா செலவிட்ட வடக்கு முதல்வர்- 4 ஆண்டுகள் -48 பயணங்கள்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய தனிப்பட்ட உதவியாளரையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்குச் சென்றுவர கடந்த 4 ஆண்டுகளில் 22 லட்சம் ரூபாவை வான் பயணங்களுக்காக மட்டும் செலவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் வானூர்திச் சேவையை வழங்கும் ஹெலி ருவர்ஸ் நிறுவனம் கொழும்பு சென்று யாழ்ப்பாணம் திரும்புவதற்கு தற்போது 29 ஆயிரம் ரூபாவை இருவழிக் கட்டணமாக அறவிடுகின்றது. முதலமைச்சரின் தற்போதைய ஒவ்வொரு பயணத்தின் போதும் அவரது தனிப்பட்ட உதவியாள ருக்கும் சேர்த்து 58ஆயி ரம் ரூபா மாகாண சபை நிதி யில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. ...
Read More »பசிலின் மனைவியின் அமைப்பிற்கு பணம் வழங்கிய துறைமுகநிறுவனம்!
முன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றிற்கு சீனாவை சேர்ந்த துறைமுகநிறுவனமொன்று பணம் வழங்கியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இது குறித்த காசோலையொன்றை வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இது குறித்த சர்ச்சை மீண்டும் மூண்டுள்ளது. கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் என்ற நிறுவனம் 2012 இல் புஸ்பா ராஜபக்ச மன்றத்திற்கு 19.41 மில்லியன் பெறுமதியான காசோலையை வழங்கியுள்ளது. மே 21 2012 திகதியிடப்பட்ட குறிப்பிட்ட காசோலை கொமேர்சல் வங்கியில் உள்ள புஸ்பா ராஜபக்ச மன்றத்தின் பெயரிற்கு அனுப்பபட்டுள்ளது. கொழும்பு இன்டநசனல் ...
Read More »தாய்லாந்தில் குகை – சிறுவர்களை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்பு!
கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு அதிகாரி கூறினார். இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ...
Read More »