யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் இந்தியா தோல்வி
இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அவுஸ்ரேலியாவில் இந்தியா ‘ஏ’, அவுஸ்ரேலியா ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’, நேஷனல் பெர்பார்மன்ஸ் அணிகள் மோதும் ‘நான்கு நாடுகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட்’ தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா ‘ஏ’ அணி தனது கடைசி லீக்கில் இன்று அவுஸ்ரேலியா ‘ஏ’ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி அவுஸ்ரேலியா ‘ஏ’ அணியின் பேட்டர்சன், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் ...
Read More »ரகசியங்களை இனி வெளியிட மாட்டோம்- அவுஸ்ரேலிய நாளிதழ்
இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்த ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக கசிந்த ரகசியங்களை வெளியிட கூடாது என கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி இது தொடர்பான செய்திகளை வெளியிட மாட்டோம் என அவுஸ்ரேலிய நாளிதழ் அறிவித்துள்ளது. இந்தியக் கடற்படைக்காக பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனம் 6 ’ஸ்கார்பின்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தக் கப்பல் தொடர்பான 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக ’தி ...
Read More »எனது நல்ல புகைப்படத்தை வெளியிடுங்கள் – தேடப்படும் அவுஸ்ரேலிய பெண்
குற்ற வழக்கில் தேடப்படும் அவுஸ்ரேலிய பெண் ஒருவர் தனது சோகமான புகைப்படத்தை மாற்றி, புன்னகையுடன் இருக்கும் அழகான படத்தை வெளியிடும்படி காவல்துறையினரை முகப்புத்தகம் மூலம் கேட்டுக்கொண்டது வைரலாக பரவி வருகிறது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த எமி சார்ப் என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், எமி சார்பை கண்டுபிடிப்பதற்காக அவரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டனர். இளம்பெண்ணின் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தியை தொலைக்காட்சி சேனல் ஒன்று சமூக வலைதளத்தில் செய்தியாக பதிவு ...
Read More »மைத்திரி ஊழல்- அவுஸ்திரேலிய ஊடகச் செய்தி -வெளிவிவகார அமைச்சு மௌனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதி செய்யப்பட்டால், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒரு வார்த்தை கூட பேச போவதில்லை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை விசித்திரமானது. சீனாவின் உதவியுடன், மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம்
‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு’ என்ற கருப்பொருளுடன் மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி உள்ளது. குறித்த ஊர்வலம் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடங்கி ஐ.நா அலுவலகம் வரை செல்ல உள்ளது. மேலும், குறித்த ஊர்வலம் சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்குமான கற்றைகள் நிறுவகத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் “அரசே மறைத்த போராளிகளை வெளியே கொண்டு வா, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வு” போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை சுமந்து சென்றனர்.
Read More »செவ்வாய் கிரகத்தில் வாழ ஒத்திகை
செவ்வாய் கிரகத்தில் வாழ ஒரு வருட ஒத்திகை ஆய்வை வெற்றிகரமாக முடித்த நாசா குழுவினர், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்து உள்ளதாக தெரிவித்தனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகம் செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை எவ்வாறு இருக்கும், அதனை எப்படி சமாளிப்பது என்பதை உணர செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான ஒத்திகை சோதனையை நாசா நிறுவனம் நடத்த முடிவு செய்தது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த விமானி, ...
Read More »கில்லெஸ்பி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்
அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கில்லெஸ்பி, யார்க்ஷையர் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார். அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் முன்னணி கவுண்டி அணியான யார்க்ஷையரின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் அந்த அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது. கடந்த 2014 மற்றும் 2015-ல் தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்திற்கு தயாராகி வருகிறது. இவரது தலைமையில் அந்த அணி 76 சாம்பியன்ஷிப் ...
Read More »ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.அமைப்பின் பெண்களுக்கான இந்திய தூதராக நியமனம்
ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். சினிமா இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லட்சுமி பூரி நியமித்து உள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூற உள்ளார். ...
Read More »2050-இல் உலக மக்கள் தொகை எவ்வளவு?
உலக மக்கள் தொகை கண்காணிப்பகம் நடத்திய ஆய்வில் 2050-ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தொடும் எனவும், இதில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக மக்கள் தொகை தற்போது 740 கோடியாக உள்ள நிலையில் 2050-ஆம் ஆண்டில் இது 1000 கோடியை எட்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2050-ஆம் ஆண்டின்போது, ஆப்ரிக்க நாடுகளின் மக்கள்தொகை 250 கோடியாகவும், அமெரிக்காவின் மக்கள் தொகை 120 கோடியாகவும் இருக்கும். ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு ...
Read More »