ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சினிமா இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவரை உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லட்சுமி பூரி நியமித்து உள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூற உள்ளார். ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை 2030-க்குள் உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு ‘பிளானெட் 50-50’ என பெயரிடப்பட்டு உள்ளது.
Eelamurasu Australia Online News Portal