குமரன்

சோனு சூட் ஆரம்பித்து வைத்த புதிய சேவை…

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், புதிய சேவையை ஆரம்பித்து வைத்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கொரோனா காலகட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். தற்போது மேலும் ஒரு புதிய பொது சேவையை சோனுசூட் ...

Read More »

வெகுஜன எழுச்சிக்கு வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின்  நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையும் அதை நேரடியாக காணொளி மூலம் பார்த்ததால் ஏற்பட்ட எல்லை மீறிய துயரங்களும் வார்த்தைகளால் அளவிட முடியாத நிஜங்களாகும். மேற்படி சம்பவம் இடம்பெற்ற அந்த கணப்பொழுதில் இருந்தே அதனை கண்டித்து திக்கெட்டும் பரவிய போராட்ட உணர்வலைகள் கவனத்தைப் பெற்ற ஒரு சம்பவமாக மாறி இருந்தது. தொடர்ச்சியாக தனக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவும் இறுதியில் உங்களால் முடியாவிட்டால் நாங்கள் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிவரும் என்ற இறுதி எச்சரிக்கையின் பின்னரே ...

Read More »

கொவிட்-19: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு!

உலக நாடுகளுக்கிடையே கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை சம அளவில் பகிர்ந்தளிப்பதில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உலகில் கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதில் தங்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்கும் ‘தடுப்பூசி தேசியவாதம்’ முழு வீச்சில் அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசி என்பது உலகப் பொதுப் பொருளாகக் கருதப்பட வேண்டும் அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலகின் அனைத்துப் ...

Read More »

முஸ்லீம் வர்த்தகரின் தடுப்பு மூன்று மாதங்களிற்கு நீடிப்பு

இனஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் முகநூலில் பதிவிட்டார் என்றகுற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் வர்த்தகரை மேலும் மூன்றுமாதகாலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிவழங்கியுள்ளது என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முகநூலில் இனஒற்றுமையை பாதிக்கும் பௌத்தமதகுருமாரை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் பசால் முகமட் நிசார் என்ற வர்த்தகரையே மூன்று மாதம் தடுத்துவைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு வழங்கியுள்ளது. ஜனவரி 11ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள சிஐடியினர் நாட்டில் ...

Read More »

சிறிலங்கா இராணுவ புலனாய்வு பயிற்சிப் பாடசாலை திறப்பு

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கரந்தெனியவிலுள்ள சிறிலங்கா  இராணுவ புலனாய்வு காவல் துறை  தலைமையகத்தில் புலனாய்வுப் பயிற்சிப் பாடசாலைக் கட்டிடத்தை நேற்று(18) திறந்து வைத்தார். இந்தப் பயிற்சிப் பாடசாலை இராணுவ அலுவலர்களுக்கு மட்டுமன்றி விமானப்படை, கடற்படை, காவல் துறை , இலங்கைச் சுங்கம், சிறைச்சாலைத் திணைக்களம் மற்றும் துறைமுக அதிகார சபை உறுப்பினர்களுக்கும் புலனாய்வுத்துறை கற்கை நெறிகளை வழங்கும். இந்தப் பயிற்சிப் பாடசாலையை வெளிநாட்டுத் துருப்புகளுக்காக எதிர்வரும் ஆண்டுகளில் திறப்பதற்கும் சிறிலங்கா  இராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read More »

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்… ‘தலைவி’ படக்குழு வெளியிட்ட புதிய புகைப்படம்

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளான இன்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 104-வது ...

Read More »

சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விக்டோரியாவுக்கு பட்டாய விமானங்களில் சென்ற மூவர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளமை அடையளாம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணி 47 வீரர்களை அவர்களது ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குளானவர்களுடன் தொடர்பினை பேணிய வீரர்கள் தவிர்ந்த மேலும் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

Read More »

சிவகரனிடம் விசாரணை! மாவீரர் தின அனுஷ்டிப்பு பற்றி துருவல்

தமிழ் தேசிய வாழ்வுரிமைக் இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மன்னாரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்றைய தினம் வவுனியாவிலிருந்து சென்றிருந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தினை நினைவு கூர்ந்தமை தொடர்பில் துருவித்துருவி வினாக்களைத் தொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் சமகால அவருடைய சமகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எதிர்காலத்தில் அவ்விதமான நினைவு கூரும் விடயங்களை தவிர்க்குமாறு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுரைகளை வழங்கிச்சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

புலம் பெயர்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் –ஐ.நா

உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு அண்மையில் வெளியிட்டது. இவ் அறிக்கையின் அடிப்படையில் ” இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களில், வளைகுடா முதல், வட அமெரிக்கா வரையிலும், அவுஸ்திரேலியா முதல், ...

Read More »

உயிரை பணயம் வைத்துப் போராடும் தொழிலாளிகளைக் காப்பாற்றுங்கள்

கிளிநொச்சியில் கடந்த ஒருவாரகாலமாக சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக் களத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: கடந்த ஆறு நாட்களாக கிளிநொச்சி ...

Read More »