பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், புதிய சேவையை ஆரம்பித்து வைத்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கொரோனா காலகட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார்.
தற்போது மேலும் ஒரு புதிய பொது சேவையை சோனுசூட் தொடங்கியுள்ளார். சோனுசூட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் என்ற ஒரு ஆம்புலன்ஸ் சேவையை அவர் துவக்கி வைத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் சேவை ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இருமாநில மக்களுக்கும் மிகப்பெரிய வகையில் உதவும் என்றும் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal