முஸ்லீம் வர்த்தகரின் தடுப்பு மூன்று மாதங்களிற்கு நீடிப்பு

இனஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் முகநூலில் பதிவிட்டார் என்றகுற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட முஸ்லீம் வர்த்தகரை மேலும் மூன்றுமாதகாலத்திற்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிவழங்கியுள்ளது என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் இனஒற்றுமையை பாதிக்கும் பௌத்தமதகுருமாரை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் பசால் முகமட் நிசார் என்ற வர்த்தகரையே மூன்று மாதம் தடுத்துவைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு வழங்கியுள்ளது.

ஜனவரி 11ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள சிஐடியினர் நாட்டில் இடம்பெற்ற பல சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் சந்தேக நபருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பௌத்தமதகுருமாரை அவமதிக்கும் முகநூல் பதிவுகளை சந்தேகநபர் வெளியிட்டார் இது இன ஒற்றுமையை பாதிக்ககூடும் எனவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.