சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் ; 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விக்டோரியாவுக்கு பட்டாய விமானங்களில் சென்ற மூவர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளமை அடையளாம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புகளை பேணி 47 வீரர்களை அவர்களது ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குளானவர்களுடன் தொடர்பினை பேணிய வீரர்கள் தவிர்ந்த மேலும் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரு முறை அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன் விக்டோரியா அஸரெங்கா, மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ஏஞ்சலிக் கெர்பர், 2019 அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற பியான்கா ஆண்ட்ரீஸ்கு, 2017 அமெரிக்க ஓபன் வெற்றியாளர் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் மற்றும் ஜப்பானிய நட்சத்திரம் கீ நிஷிகோரி, அத்துடன் மெக்சிகன் வீரர் சாண்டியாகோ கோன்சலஸ் மற்றும் உருகுவேய வீரர் பப்லோ கியூவாஸ் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஒரு பட்டாய விமானத்தின் மூலமாக விக்டோரியாவுக்கு சென்றவர்கள் ஆவார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த வீரர்களில் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா, மரியா சக்காரி, ஒன்ஸ் ஜபூர் மற்றும் பெலிண்டா பென்சிக் மற்றும் மார்டா கோஸ்ட்யுக் ஆகியோர் அடங்குவர்.

இந் நிலையில் குறித்த இரு விமானத்திலும் வருகை தந்த விமானக் குழு உறுப்பினர் ஒருவரும், மேலும் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக விக்டோரிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று தெரிவித்தனர்.

மூன்று பயணிகளும் தாங்கள் விக்டோரியாவுக்கு வருகை தருவதற்கு முன்னர் மேற்கொண்ட சோதனைகளில் கொவிட்டுக்கு எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தினர். எனினும் விக்டோரியாவை சென்றடைந்த பின்னர் மேற்கொண்ட சோதனைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவரும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக சுகாதார ஹேட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அபுதாபி விமானத்தில் வருகை தந்த 63 பயணிகளும், லாஸ் ஏஞ்சல்ஸ் விமானத்தில் வருகை தந்த 66 பயணிகளும் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இரு வாரங்களுக்கு அவர்கள் அவசியம் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 08 ஆம் திகதி அவுஸ்திரேலிய ஓபன் ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள், தங்கள் ஹோட்டல் அறையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரம் வரை பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நேரத்தில் அவர்களின் உடற்பயிற்சி பராமரிக்க அவர்களின் ஹோட்டல் அறைகளுக்கான உபகரணங்களை அணுக வீரர்கள் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.

இதனிடையே வீரர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள போட்டி அமைப்பாளர்கள் செயல்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய ஓபன் போட்டி இயக்குனர் கிரேக் டைலி சுட்டிக்காட்டியுள்ளார்.