சிங்கப்பூரின் அரசகரும மொழிகளில் ஒன்றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. தமிழ்மொழி சிங்கப்பூர் பாராளுமன்றத்தில், பாடசாலைகளில் தாய்மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் தமிழுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதுடன், ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலம், சீனமொழி மற்றும் மலே மொழி ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்டுக்களில் அச்சிடப்படுகிறது. தமிழுக்குரிய அந்த அந்தஸ்தை எந்தத் தடங்கலுமின்றித் தொடர்ந்து பேணுவதில் அரசாங்கம் முழுமையான உறுதியுடன் இருக்கிறது. சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் கடந்த ஞாயிறன்று ...
Read More »குமரன்
திசை திருப்பப்படும் பிரச்சினைகள்!
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், முளைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் மறைக்க இன்னொரு புதிய பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுருங்கச் சொல்லின், பெரிய கோடு – சிறிய கோடு தத்துவம் தான். ஒரு விவகாரத்தின் மீது குவிகின்ற மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு, இன்னொரு விவகாரத்தின் மீது அதிக கவனத்தைக் குவிக்க வேண்டும். அது மக்களின் கோபத்திலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், சில அத்தியாவசியப் பொருட்களின் வரிகளைக் குறைத்தும், விலைகளைக் குறைத்தும், மக்களின் அபிமானத்தை வெல்ல முயன்றது. ஆனாலும், ...
Read More »நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள்!
மின் உற்பத்திக்காக எரிசக்தி மூலங்களை பயன்படுத்த வேண்டிய நிலை தற்போது நாட்டில் நிலவுகின்ற போதிலும் மக்களுக்கு தீங்கு இன்றிய வகையிலேயே உற்பத்திகள் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினால் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; நிலக்கரி இயற்கை எரிவாயுவிற்கு அடுத்ததாக மூன்றாவது மாற்று மூலமாக ...
Read More »அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது!
சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக தேசிய கீதமானது சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கடந்த ஆட்சியின்போது பாடப்பட்டு வந்தது. எனினும் தற்போது ஆட்சியில் உள்ள இந்த அரசாங்கமானது ஏன் இவ்வாறு இன நல்லுறவை முறிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு இந்த ...
Read More »ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ் தன்னுடைய வணிக ...
Read More »தர்பாரில் அரசியல் இல்லை! – ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தில் அரசியல் இல்லை என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம், ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தர்பார்’ மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். ...
Read More »இலவச வீசா முறையை மேலும் ஒரு மாதம் நீடிக்க நடவடிக்கை!
இலவச வீசா நடைமுறையானது அடுத்த ஆண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து மேலும் ஒருமாதகாலத்தால் குறித்த வீசா நடைமுறையை தொடர எதிர்பார்க்கின்றோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ...
Read More »உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது!
மக்களை குணப்படுத்த வேண்டும் என எண்ணிய மருத்துவர் சயத் மிர்வாஸ் ரோஹனியால் உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது. தாலிபான் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து தப்பி வந்த இந்த இளம் ஆப்கானிய மருத்துவர், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையில் சிக்கி தனது 32 வயதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ரோஹனி மரணம் தொடர்பான விசாரணை மிகவும் ஆரம்ப கட்டங்களிலேயே உள்ள நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார் இக்குடும்ப வழக்கறிஞரான ...
Read More »மூன்றில் இரண்டு சாத்தியமா..?
பாராளுமன்றத் தேர்தல் என்பது குறித்த பிரதேசத்தின் ஆளுமைகளையும் ஆட்சியாளனையும் தீரமானிக்கும் வித்தியாசமான செயற்பாடாகும். அதிலும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பெறப்படும் பெறுமானங்கள் சற்றும் வித்தியாசமானதாகவே வகுக்கப்படுகின்றன. உதாரணமாக நான்கு தேர்தல் தொகுதிகள் கொண்ட ஒரு மாவட்டத்தில் ஒருவர் தேசியப்பட்டியல் ரீதியாகவும் தெரிவு செய்யப்படுகிறார். மாவட்டமொன்றில் மூன்று கட்சிகளுக்கு மேல் போட்டியிடுமாயின் விகிதாசார முறையில் தனியொரு கட்சி முழு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களையும் தமதாக்கிக் கொள்வதென்பது சிக்கல் நிறைந்ததும் ஒவ்வாத ஒரு முயற்சியுமாகும். எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ...
Read More »செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும்!
செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி அளவில் கண் பார்வை இழப்புகள் ஏற்படுகின்றன. இது சர்வதேச அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கிறது. இதை சரி செய்யும் ஆய்வில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண் பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் உள்ள மிக சிறிய மின் ...
Read More »