மின் உற்பத்திக்காக எரிசக்தி மூலங்களை பயன்படுத்த வேண்டிய நிலை தற்போது நாட்டில் நிலவுகின்ற போதிலும் மக்களுக்கு தீங்கு இன்றிய வகையிலேயே உற்பத்திகள் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினால் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது;
நிலக்கரி இயற்கை எரிவாயுவிற்கு அடுத்ததாக மூன்றாவது மாற்று மூலமாக இருக்கிறது. எவ்வாறெனினும் நிலக்கரியினால் ஏற்படும் பாதிப்புகளை அனல் மின் நிலையத்தினை சூழவுள்ள பிரதேச மக்களை அவதானிப்பதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும். அனைத்தையும் மீறி தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரியானது சுத்தமான நிலக்கரி என்ற வதந்திகள் பலராலும் பரவப்பட்டு வருகின்றது. நிலக்கரியினால் நன்மைகள் வருகின்றன என்ற கட்டுக்கதைகளும் சிலரால் பரப்பப்படுகின்றன. அவை அனைத்தையும் தொழிற்சாலை நிர்வாகம் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.
வழக்கமான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலங்களாகிய சூரிய சக்தி, காற்று, மற்றும் உயிர்த்திண்ம கழிவு போன்றவற்றின் பயன் பற்றிய உண்மையான மற்றும் ஒதுக்க முடியாத ஆதாரங்கள் இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகளின் எந்த பகுதியிலும் தொடர்ந்தும் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. எனினும் அதையெல்லாம் தவிர்த்து நிலக்கரியினை அறிமுகப்படுத்தி மக்களுக்கு தீங்கினை விளைவிக்கும் வகையிலான மின் உற்பத்தியினை மேற்கொள்வது எவ்வாறு அபிவிருத்தியில் உள்ளடங்கும்.
எனினும் உலக நாடுகள் புதுப்பிக்கத்தக்க சக்திகளை கொண்டு மின் உற்பத்தியை மேற்கொள்ளும் அதேவேளை இலங்கை தற்போதும் நிலக்கரியினை தழுவிய நிலையிலேயே காணப்படுகின்றது.
நிலக்கரி சிறந்த மூன்றாவது தெரிவாக மட்டுமே உள்ளது என்ற கருத்தை பொய்யாக்கும் வகையில் சில சான்றுகள் காணப்படுகின்றன. உலகின் எந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும் நிலக்கரியானது பல மாசுக்களை கொண்ட நிலையிலேயே காணப்படும்.
ஆலையில் இருந்து புகையை வெளியேற்றக்கூடிய புகைப்போக்கிகள் தங்கியிருக்கும் கந்தகம், பாதரசம், மற்றும் பிற கன உலோகங்கள் போன்றன வெளிவரும் பிற வாயுக்கள் மற்றும் உலோகங்களை தக்கவைக்கும். அதன் பின்னர் அவை ஆலையை குளிர்வடைய செய்யும் நீரானது சூழல் கட்டமைப்பில் நிரந்தரமாக தங்கிவிடும். ஏற்கனவே வெளியிடப்பட்ட கழிவுகளுடன் மேலும் கழிவுகள் நிறைந்துவிடும். இதற்கு நிரந்தர தீர்வென்று எதுவும் இல்லை.
500 மெகாவோல்ட் தூய்மையான நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மேலே உள்ள உயர் அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலையுடன் இயங்கினாலும் கூட அது சுற்றுப்புற சூழலுக்கு ஆண்டுதோறும் கீழ்வரும் அளவுகளிலே மாசுக்களை வெளியிடும். இந்த கழிவுகள் சூழலில் தங்கியிருக்கும்.
அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கணிப்புகள் அடிப்படையில், சாதாரண மாசு வகைகளாக -கந்தகம் வருடாந்
தம் 10,000 தொன் அளவிலும், சக்தி 193,000 தொன் அளவிலும், சாம்பல் 125,000 தொன் அளவிலும் விசமுள்ள உலோகங்கள் அடிப்படையில்- ஈயம் 770 கிலோகிராம், மிக அதிக விஷமான பாதரசம் 410கிலோகிராம், குரோமியம் 400 கிலோகிராம், நிக்கல் 385 கிலோகிராம் மற்றும் ஆசனிக் போன்ற கழிவுகள் சூழலிலே கலக்கப்படுகின்றன.
மேற்கூறிய கணிப்புகளில் 50 வீதம் சரியானது என்ற வகையில் இருந்தாலும் தூய்மை யான நிலக்கரி என்ற போர்வையில் விசத்தையே இலங்கைக்கு இறக்குமதி செய்கி றோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் வருடங்க ளில் சூழலில் சேரும் இரசாயனங்களின் அளவுகளில் மாத்திரமே மாற்றங்கள் நிகழும்.